தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் *விக்ரம ராஜாவின் வணிகர்கள் மீதான அக்கறைக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு!* தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா மயிலாடுதுறையில் நடைபெற்ற வணிகர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகின்ற பொழுது, வணிகர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நலிவடைந்த வணிகர்களுக்கு அரசு வழங்குகின்ற ஓய்வூதியத்தை போன்று தங்கள் சங்கமும் வழங்க உள்ளதாக அறிவித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.பரந்த மனப்பான்மை கொண்டதாகும். மேலும் வணிகர்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் தைரியமாகவும் சுதந்திரமாகவும் தங்கள் தொழிலை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும், காவல்துறைக்கும் வணிகவரித் துறைக்கு அஞ்சாத அளவிற்கு வியாபாரம் செய்கின்ற பொழுது நம்மை யாரும் தொடக்கூட முடியாது என்றும் பேசினார். பொய்யான முறையில் குற்றம் சாட்டப்பட்டு வணிகர்கள் மீது அரசு அலுவலர்கள், வணிகவரித்துறையினர் பிரச்சனைகளை எழுப்பினால் தமிழகம் முழுவதும் ஒருமித்த குரலில் போராட்டத்தில் இறங்கி முறியடிப்போம் என்றும், அதே சமயத்தில் பணம் சம்பாதிப்பதோடு வணிகர்கள் தங்களுடைய உடல் நலமும் பேணி பாதுகாக்க வேண்டும், தினசரி காலை முதல் இரவு வரை கடைகளில் வாழ்க்கையை கழிக்கும் நீங்கள் உங்களில் உடலுக்கும் உள்ளத்திற்கு ஊக்கமும் உத்வேகமும் அளிக்க முயற்சிகள் எடுத்திட வேண்டும் என்றும் பேசினார். நாம் சம்பாதிக்கக்கூடிய பொருளை அனுபவிப்பதற்கு உடல்நலன் மிகவும் அவசியம் என்றும், வணிகர்கள் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் தினசரி காலையில் ஒரு மணி நேரமாவது தங்கள் உடல்மீது தனி கவனம் செலுத்தி, பயிற்சிக்காகவும் திடத்திற்காகவும் பராமரிப்பிற்காகவும் செலவிட வேண்டும் என்றும், யோகா,தியானம், மூச்சுப் பயிற்சி நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் வணிகர்களிடம் கேட்டுக் கொண்டார். ஒட்டுமொத்தமாக விக்கிரம ராஜாவின் பேச்சு அனைவரையும் உற்சாகப்படுத்தியதோடு விழிப்புணர்ச்சியும் ஏற்படுத்தியது என்று சொல்லலாம். ஆகவே இப்படிப்பட்ட தலைவர்களின் பேச்சினை கேட்டு வணிகர்கள் அப்படியே கடைபிடித்து நடந்தால் மிகவும் நன்மையே கிடைக்கும். மேலும் வணிகர்கள் தங்கள் தொழிலையும் உடலையும் பாதுகாக்கின்ற பொழுது ஆரோக்கியமான சூழல் நிச்சயம் தழைத்தோங்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை என்பது உறுதி என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டியுள்ளார்..