தூத்துக்குடியில் அரசு விழா கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் நேரு, தங்கம்தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ மார்க்கன்டேயன் மேயர் ஜெகன் பெரியசாமி கலெக்டர் செந்தில்ராஜு பங்கேற்பு
தூத்துக்குடி மாநகராட்சி அண்ணா பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவிற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் கனிமொழி எம்.பி தலைமையில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.200 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.58.67 கோடி மதிப்பீட்டில் நவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள அண்ணா பழைய பேருந்து நிலையக் கட்டிடத்தினையும், மாநகராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.28.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதப்பூங்கா மற்றும் நகர்சார் மையத்தினையும் மநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஆசிய மேம்பாட்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.87.01 கோடி மதிப்பீட்டில் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் 4 சிப்பங்களாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.274.50 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்டத்தில் இடங்களில் நியாயவிலைக்கடை கட்டிடம், பயணியர் நிழற்குடை கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைத்தல், கலையரங்கக் கட்டிடம், அங்கன்வாடி மையக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கும் மேலும், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் சார்பில் ரூ.189 இலட்சம் மதிப்பீட்டில் கழுகுமலை சார்பதிவாளர் அலுவலக் கட்டடம் கட்டுவதற்கும், ரூ.184.15 இலட்சம் மதிப்பீட்டில் எட்டையபுரம் சார்பதிவாளர் அலுவலக் கட்டடம் கட்டுவதற்கும், ரூ.190 இலட்சம் மதிப்பீட்டில் கயத்தாறு சார்பதிவாளர் அலுவலக் கட்டடம் கட்டுவதற்கும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி மீன் பிடித்துறைமுகத்தை கூடுதல் உட்;கட்டமைப்பு வசதியுடன் நவீனப்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.
கோவில்பட்டி நகராட்சியில் வார்டு எண் 4 சங்கலிங்கபுரம் மற்றும் வார்டு எண்: 30 அறிஞர் அண்ணா நகர் பகுதி ஆகிய இடங்களில் ரூ.38 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். கோவில்பட்டி நகராட்சியில் பணிபுரியும் 114 தூய்மைப் பணியாளர்களுக்கு மழைநீர் பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட தூய்மை பணிகளுக்கான உபகரணங்களையும், பேரூராட்சிகளில் பணிபுரியும் 70 தூய்மைப் பணியாளர்களுக்கு மழைநீர் பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட தூய்மை பணிகளுக்கான உபகரணங்களையும், மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 98 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.8 கோடி வங்கிக்கடனுதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்கள்.
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தின் ‘தூய்மையான சாலையோர உணவு மையம்” என்று கோவில்பட்டி பேருந்து நிலையத்திற்கு வழங்கப்படும் சான்றிதழை கோவில்பட்டி நகராட்சி ஆணையாளருக்கு வழங்கினார்.
தூத்துக்குடி அரசு விழாவில் பல்வேறு துறைகளில் சார்பில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 282 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட வழங்கினார். எம்.எல்.ஏ மார்க்கன்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜு, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, துணைமேயர் ஜெனிட்டா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தூத்துக்குடி போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற்கு மாநகர பகுதியில் இரு இடங்களில் மேம்பாலம் அமைத்து கொடுத்து கடைசி மாவட்ட வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஓதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் இந்த பேருந்து நிலையத்திற்கு இரண்டு ஆண்டு காலமாக திமுக ஆட்சி வந்த பிறகு பணிகளை முறையாக நிறைவாக செய்துள்ளோம். அதற்கு இரண்டு கட்சிகள் சொந்தம் கொண்டாடுகின்றன. முதலமைச்சரின் சீறிய பணியில் திட்டங்கள் நடைபெறுகிறது என்றார்.
கனிமொழி எம்.பி பேசுகையில் பல்வேறு கோரிக்கைகளை இங்கு முன் வைத்தனர். நாம் பல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம் அதற்கான நிதியை ஓதுக்கக்கூடிய அமைச்சரே இங்கு வந்துவிட்டார். இனி அவர் பார்த்துக்கொள்வார். என்றார்.
அமைச்சர் நேரு பேசுகையில் திமுக ஆட்சி அமைந்து பின்புதான் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி என அனைத்து பகுதிகளுக்கும் முறையாக எனது துறைக்கு ஓதுக்கப்பட்ட நிதியை பிரித்து கொடுத்து தமிழகம் முழுவதும் பணிகள் நடைபெறுகிறது. இந்த ஆட்சியின் சாதனை தொடர்ந்து நடைபெற அனைவரும் ஓத்துழைக்க வேண்டும். என்றார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில் உங்கள் மாவட்டத்தில் அருகிலுள்ள மாவட்டத்தில் தான் நான் இருக்கிறேன் தமிழக முதலமைச்சர் இங்கு வந்து பர்னிச்சர் பார்க் அடிக்கல் நாட்டினார். அதற்கு ஓப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன விரைவில்; அனைத்து பணிகளும் நடைபெற்று சர்வதேச அளவில் உருவாக்கப்படும்; இந்த மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களுக்குரிய நிதி ஓதுக்கீடு செய்யப்படும் என்றார்.