நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடி ஓன்று உலா வருகிறது குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வீட்டில் கதவுகளை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை துவம்சம் செய்து வருகிறது இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர் இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவக்குமார் என்கிற வனத்துறை காவலரை தாக்கியது இந்நிலையில் இன்று அதிகாலை பந்தலூர் பஜார் பகுதியில் கரடி ஒன்று உலா வந்தது இதனைப் பார்த்த அங்குள்ள நாய்கள் கரடியை துரத்தியது நாய்களின் குறைக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் வெளியில் வந்து பார்க்கையில் கரடி ஒன்று அப்பகுதியில் ஓடுவது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் தமிழக அரசு உடனடியாக மனித வன விலங்கு மோதலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இப்பகுதியில் பொதுமக்களை பயமுறுத்தி வரும் கரடியை பிடித்து அடர்ந்த வனப்பதிகளுக்கு கொண்டு சென்று விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் கரடி உலாவரும் வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகிறது