சூடான உணவுகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டி தந்தால் அபராதம் - தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை.!


 சூடான உணவுகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டி தந்தால் அபராதம் - தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை.!


சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி தரக் கூடாது என தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் மாரியப்பன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், உணவு பாதுகாப்பு சட்டம் 2006 ன் படியும் உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2011-ன் படியும் நுகர்வோரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு உணவகங்களில் இனி சூடான உணவுப் பொருட்களான டீ, காபி, பால், சாம்பார், ரசம் உள்ளிட்ட இதர குழம்பு வகைகளையும் கூட்டு பொறியல் போன்ற சூடான உணவுகளை, பிளாஸ்டிக் பைகளில் கட்டி தரக்கூடாது என  உத்தரவிடப்படுகிறது.


இந்த உத்தரவையும் மீறி மேற்கண்ட உணவு வகைகளை பிளாஸ்டிக் பைகளில் கொடுத்தால், சம்பந்தப்பட்ட ஹோட்டல்கள், உணவகங்கள் மீது முதல் தடவை 2000 ரூபாய், இரண்டாம் தடவை 5000 ரூபாய், மூன்றாம் முறை பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட கடையின் இயக்கத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் சூடான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் கட்டித் தரப்பட மாட்டாது என அறிவிப்பு பலகையினை வைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Previous Post Next Post