மாவட்ட அளவிலான இரட்டையர் இறகு பந்து போட்டி :வெற்றி பெற்ற அணிகளுக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார்.
கோவை வடக்கு பா.ஜ.க விளையாட்டு மற்றும் இளைஞர் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான இரட்டையர் இறகு பந்து போட்டிகள் திருமுருகன்பூண்டி பாலாஜி ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடந்தது. இதில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 45 அணிகள் பங்கேற்றன.
இதனையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட தலைவர் சங்கீதா தலைமை தாங்கினார். விளையாட்டு மற்றும் இளைஞர் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் டாக்டர் சுந்தரன் வரவேற்றார்.
இறகு பந்து போட்டியின் இறுதியில் அவிநாசி இந்திரன், ரஞ்சித் அணியினர் முதலிடத்தையும், பூண்டி வெற்றி, சிவா அணியினர் இரண்டாம் இடத்தையும், பூண்டி சுந்தர், ரஞ்சித் அணியினர் மூன்றாம் இடத்தையும் , பள்ளிபாளையம் முருகசாமி, சஞ்சய் அணியினர் நான்காம் இடத்தையும் பிடித்தனர்.
சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கி பாராட்டி பேசினார். விழாவில் நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர் கதிர்வேல், மாவட்ட பொது செயலாளர் நந்தகுமார், மண்டல பொறுப்பாளர் சண்முக பாபு, பொருளாதாரப் பிரிவு மாவட்ட தலைவர் மனோகரன், திருமுருகன்பூண்டி மண்டல் தலைவர் ஜெயபிரகாஷ், விளையாட்டு பிரிவு துணைத் தலைவர் இன்ஜினியர் அர்ஜுனன், மண்டல் பொதுச்செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட செயலாளர்கள் கந்தசாமி, நவீன் மற்றும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் கார்த்திகை சுந்தரன் நன்றி கூறினார்.