ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சத் தியமங்கலம்வட்டாரவளமையவளா கத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமினை பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறு வாழ்வு நல அலுவலர் கோதைச் செல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய ஸ்ரீ ஆகியோர் ரிப்பன் வெட்டி முகா மை துவக்கி வைத்தனர். முகாமில் மன நல மருத்துவர் மனநல ஆலோ சகர் எலும்பு மூட்டு மருத்துவர், கண் மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், முட நீக்கியல் வல்லுநர், இயன்முறை மருத்துவர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
மருத்துவ முகாமில் 150 பேர் கலந்து கொண்டனர்.மருத்துவபரிசோதனை நடத்தப் பட்டதில், 57 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடை யாள அட்டைகள் வழங்கப்பட்டது. 48 பேருக்கு நல வாரிய உறுப்பினர்பதி வு செய்யப்பட்டது. 31 பேருக்கு அடை யாள அட்டை புதுப்பிக்கப்பட்டது. மேலும் உதவி உபகரணங்கள், தனி த்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு, மாதாந்திர உதவித்தொகை, உயர்ஆதரவு தேவை போன்ற விண் ணப்பங்கள் பெறப்பட்டது. முகாமில் ,அரசு மகளிர் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ஏ.எஸ். செந்தில்நாதன், பள்ளி மேலாண் மை குழு உறுப்பினர் கந்தசாமி, சத்தி தெற்கு ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப் பாளர் பிரபு மற்றும் பொதுநல ஆர்வ லர்கள் கலந்து கொண்டனர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகே ஸ்வரி மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்று நர்கள், இயன்முறை மருத்துவர்கள் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடு களை செய்திருந்தனர்.