சேலம் ஹோலி கிராஸ் பள்ளியில் வைர விழா முன்னிட்டு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி


ஹோலி கிராஸ் பள்ளியில் வைர விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி  நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் விழாவை துவக்கி வைத்து சிறப்பித்தார்.இவ் விழாவில் மாநில அளவில் பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த மாணவர்கள் தங்களது படைப்புத்திறனை காட்சி படுத்தினார்கள்.ஹோலி கிராஸ் பள்ளியின் பல்துறை மன்றத்தின் மாணவர்கள் தங்களது மிகப்பிரமாண்டமான படைப்பாற்றல்களை காட்சிப் படுத்தினார்கள்.இயந்திர மனிதன், அறிவியல் வேடிக்கை நிகழ்வுகள்,கோளரங்கம், மொபைல் அருங்காட்சியகம் போன்றவை மிகப்பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டது.சேலம் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் வந்து கண்காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.

சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் 

Previous Post Next Post