"பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புகளை உடனடியாக நிறுத்தாவிட்டால் மற்ற பகுதிகளுக்கும் போர் விரிவடையும் - ஈரான் எச்சரிக்கை!
காஸா மீது தரை வழியாக தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில், "பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புகளை உடனடியாக நிறுத்தாவிட்டால், மத்திய கிழக்கின் மற்ற பகுதிகளுக்கும் போர் விரிவடையும்; அப்படி நடந்ததால் இஸ்ரேல் ஒரு பெரிய பூகம்பத்தை சந்திக்கக்கூடும்" என்று ஈரான் கடுமையான
எச்சரிக்கையை விடுத்துள்ளது; இப்போரில், 1,400க்கும் அதிகமான இஸ்ரேலியர்களும், 700க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 2,670க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்