தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் மாநில இணை பொதுசெயலாளர் விஜயகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தமிழக அரசு அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூஜை கொண்டாட தடை விதித்ததை கண்டித்துதுள்ளார்
நமது பாரத நாட்டில் பாரம்பரியமாக சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை விஜயதசமி கொண்டாடி வருகிறோம். ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை விஜயதசமி பூஜையை அரசு அலுவலகங்களிலும் பன்னெடுங்கால விழாவாக கொண்டாடி வருகிறார்கள் இவ்விழா நமது நாட்டின் பாரம்பரியத்தை அடையாளமாகும். இந்த நிலையில் தற்போதைய தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு இவ்விழாவை தடை செய்கிறது. திமுக அரசு பதவியேற்கும் போது அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் யார் மனதும் புண்படுமாறு செயல்பட மாட்டேன் என்று உறுதி எடுத்து விட்டு தற்போது மன்னர் காலந்தொட்டு தொட்டு அரசு அலுவலகங்களில் நடந்து வரும் சரஸ்வதி ஆயுத பூஜையை அவர்களது கட்சி கொள்கையின்படி இந்து மதத்தை எதிர்க்கும் நோக்கில் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சிதைக்கும் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது. திமுக அரசை தமிழ் நாடு விஸ்வ இந்து பரிசத் வன்மையாக கண்டிக்கிறது இதற்கு உத்தரவிட்ட அரசு உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு இனி இதுபோன்று எக்காலத்திலும் செய்தால் தாங்கள் என்றுமே ஆட்சியில் அமர முடியாதபடி மக்கள் செய்துவிடுவார்கள் என்பதை இதன் மூலம் எச்சரிக்கிறோம் என்று தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்