ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், வடக்குப் பேட்டை, திரு.வி.க.நகரில், நாரண் செங்கன் திரு முகத்து செல் ல திருமால். இப்பூவுலகில் எங்கும் பக்தி பூரித்து, தொழுவோருக்கு பூ மலராய் அருள் கொடுத்துவரும், அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணர் திருக்கோயிலில்,புரட்டாசி மாத கவாள பூஜை, திருக் கோடி தீபம் ஏற்றுதல் மற்றும் நவராத்திரி விழா வெகுவிமரிசையாக நடை பெற்றது. காலை 6 மணிக்கு பரிவார தெய்வ ங்களுக்கும்,ஸ்ரீ லட்சுமி நாராயண னுக்கும் அபிஷேக அலங்கார பூஜை கள் நடைபெற்றது. பின்னர் 7 மணி க்கு மஹா தீபாராதனையும், மாலை 7 மணிக்கு,திருக் கோடி தீபம் ஏற்று தல் மற்றும் கவாள பூஜை,தீபாரத னை நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் இரவு 7.45 மணிக்கு, அலங் கரிக்கப்பட்ட சப்பரத்தில், லட்சுமி நாராயணர் பெருமாள் எழுந்தருளி, திருவீதி உலா வடக்கு பேட்டை, முக்கிய வீதிகளில் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் தேங்காய், பழம்அளித்து,சுவாமியை தரிசித்தனர். பின்னர் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.
நவராத்திரி கொழு ஆரம்ப விழா வில், ஏராளமான பக்தர்கள் லட்சுமி நாராயணன் குறித்து பஜன் பாடல் களை பாடினர்.