நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் பந்தலூர் தாலுகா பிதிர்காடு வன சரகம் உட்பட்ட உப்பட்டி பெருங்கரை புலிமடா ராமசாமி காலனி தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டம் கழகம் நெல்லியாளம் சரக்கு.1 ஆகிய பகுதியில் கடந்த சில நாட்களாக கரடி ஒன்று உலா வருகிறது இக்கரடியானது மக்கள் குடியிருப்பு பகுதியில் சென்று அங்குள்ள வீட்டின் கதவுகளை உடைத்து அங்குள்ள எண்ணெய் உப்பு போன்ற உணவுப் பொருட்களை தின்றுவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர் இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு கூடலூர் வன அலுவலர் ஓம்கார் உத்தரவின் பெயரில் பிரதர் காடு வன சரகர் ரவி வனவர் உத்தரவின் பேரில் உத்தரவின் பேரில் வனக்குழுவினர்கள் முகாமிட்டு கண்காணித்து வந்தனர் இந்நிலையில் நேற்று இரவு வேட்டை தடுப்பு காவலர் குமார் என்பவரை கரடி தாக்கியது இதனால் நிலைகுலைந்து போனவரை மீட்டு வன குழுவினர் உதகை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் இந்நிலையில் கூடலூர் வன அலுவலகம் ஓம்கார் கரடியை கூட்டு வைத்துப் பிடிக்க உத்தரவிட்டிருந்தார் உத்தரவின் பெயரில் பிதர்காடு வன சரகர் ரவி கணவர்பிலிப்ஸ் வனவர் சார்ஜ் பிரவின் வனக்காப்பாளர் ராமகிருஷ்ணன் மணி வன காவலர் ஆர் பிரபு ஆர் முனியாண்டி பிலிப்ஸ் வன காப்பாளர் பிரவீன் ராமகிருஷ்ணன் வனக்காவலர் ஆர் பிரபு ஆர் .முனியாண்டி .மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் யானை கண்காணிப்பு குழு ஆகியோர் இணைந்து இப்பகுதியில் அட்டகாசம் செய்து வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு கூண்டு வைக்கப்பட்டுள்ளது விரைவில் கரடி பிடிபடும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் மேலும் பொதுமக்கள் மிகவும் கவனமாக இரவு நேரங்களில் இருக்குமாறும் மாலை இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் அதிகமாக நடமாட வேண்டாம் என அறிவித்துள்ளனர் மேலும் விரைவில் கரடியை பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ரஜினிகாந்த் (தலைவர் நெல்லியாளம் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் நீலகிரி மாவட்டம்) வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்