ஆம்னி பஸ் ஸ்டிரைக் வாபஸ்- ஆம்னி பேருந்து கூட்டமைப்பு அறிவிப்பு.!
சில நாட்களுக்கு முன்பு அதிக கட்டணம் வசூலித்ததாக 120 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் சிறைப்பிடித்து அபராதம் விதித்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த ஆம்னி உரிமையாளர்கள், இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது அறிவித்தனர். அரசு அதிகாரிகள் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், "அரசு எங்களின் 3 கோரிக்கையும் ஏற்றுக்கொண்டதால் போராட்டத்தை கைவிடுகிறோம்" என ஆம்னி உரிமையாளர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆம்னி பேருந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.