ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மன்னாதம் பாளையம், நஞ்சை காலமங்கலம் ஊராட்சி மன்ற பகுதிகளில் பாரத பிரதமரின் மகத்தான தூய்மை இந்தியா திட்டம் ஆற்றல் அசோக்குமார் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மக்கள் வசிக்கக்கூடிய இடத்தை தூய்மை பணியாளர்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கீழ் பயன்பெறும் பயனாளிகள் கிராம மக்களுடன் இணைந்து ஆற்றல் அசோக்குமார் அவர்கள் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
மேலும் இந்நிகழ்வில் கோவை மகாதேவி மகா சமஸ்தானம் சுவாமி மகா ஸ்ரீ யூக் தேஸ்வர் ஜி மகராஜ் தமிழ்நாடு தலைவர் அகில பாரதிய சன் சமாதி நிறுவனர் பாரத இந்து சேவா சபா அவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டார்.
மேலும் நிகழ்ச்சியை பாரத இந்து சேவா சபா ஈரோடு மாவட்ட தலைவர் ஆர் வித்யாசாகர் மிகச் சிறப்பாக செய்திருந்தார்.
தமிழ் அஞ்சல் செய்தியாளர் பூபாலன்