தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மேகமலை வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக ஈஸ்வரன் என்பவர் வனத்துறையினரால் சுடப்பட்டு உயிரிழந்தார். காப்புக் காட்டுக்குள் அத்துமீறி நுழைந்தகாவும், வனத்துறையினரை கத்தியால் தாக்க வந்ததால் ஈஸ்வரன் சுடப்பட்டதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
வனத்துறை நாள் சுடப்பட்டு இறந்த ஈஸ்வரன் குடும்பத்தார் மற்றும் கிராமத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சாலை மறியல் ஈடுபட்ட நபர்களை காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியர் வலதிற்கு முன்பாக தற்போது அமர வைத்துள்ளனர். இருந்த போதிலும் ஈஸ்வரன் தரப்பினர் திரண்டு கொண்டே இருந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
மேலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஈஸ்வரன் மனைவி மற்றும் கிராமத்தினர் அதிகளவில் ஒன்று கூடி வருகின்றனர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள், வயல் வேலைக்கு சென்ற ஈஸ்வரனை வனத்துறை அநியாயமாக கொன்று விட்டதாக புகார் தெரிவித்துள்ள்னர்.
ஈஸ்வரன் இறப்பிற்கு அரசு சார்பாக ஒரு கோடி ரூபாய் நிவாரணமும் அவரது மகனுக்கு அரசு வேலை வழங்கும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு செல்ல மாட்டோம் என தெரிவித்தனர். இந்த நிலையில் அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்துள்ளனர்.
இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது