சேலத்தில் நவராத்திரி விழாவினை முன்னிட்டு இரண்டு உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. நெகிழியை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 50க்கும் மேற்பட்டோர் கொலுவில் வைக்கும் பொம்மைகள் தயாரித்து உலக சாதனை புரிந்தனர். பிளாஷ்டிக் பாட்டில்கள் , கண்ணாடி பாட்டில்கள் ,நெகிழி பைகள், தேங்காய் நார்,களிமண் பொம்மைகள் , அட்டைபெட்டிகள் என பயன்படுத்தி தசாவதாரம்,அஷ்டலட்சுமி சிலைகள்,சீன பொம்மைகள் , மரபாச்சி பொம்மைகள் ,அலங்கார பொருட்கள் என தயாரித்து கொலுவாக அமைத்தனர். இரண்டாவது நிகழ்வாக நவராத்திரி விழா வை வறவேற்க்கும் விதமாக 7 மாணவிகள் & வயலின் தீலீப்பன் அவர்களுடன் கர்நாடக கீர்த்தனைகளை இடைவிடாது 3மணிநேரம் வாசித்து உலக வாசதனை புரிந்தனர்.இந்த நிகழ்வு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததை புத்தகத்தின் இயக்குநர் ஹேமலதா அறிவித்தார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தி சென்னை சில்க்ஸ் மேலாளர் சங்கர் , டாம் & ஜெர்ரி மாண்டசரி பள்ளி நிறுவனர் பிரியா பங்கேற்று உலக சாதனை சான்றிதழ் & பதகங்களை வழங்கினர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை நோபல் உலக சாதனை குழுவினர் மற்றும் தி சென்னை சில்க்ஸ் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்