நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் சரணாலயம் உள்ளது இப்பகுதியில் யானை புலி மான் கரடி ஓநாய் சிறுத்தை காட்டெருமை போன்ற வனவிலங்குகள் ஏராளமாக வசித்து வருகின்றது இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக யானைகள் கூட்டம் கூட்டமாக மக்கள் வசிக்கும் பகுதியில் உலா வருகிறது இதனால் பலமுறை உயிர் சேதங்களும் ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் தங்களுது உடமைகளையும் இழந்துள்ளனர் பகல் நேரங்களிலும் யானை உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் இந்நிலையில் பந்தலூர் அருகே இரும்பு பாலம் என்ற பகுதியில் புல்லட் ராஜா மற்றும் கட்ட கொம்பன் என்ற இரண்டு காட்டு யானைகள் மக்கள் வசிப்பிடங்களுக்கு சென்று அச்சுறுத்தி வருகிறது இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது இந்த நிலைமையில் இரண்டு காட்டு யானைகளை விரட்ட கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சீனிவாசன், பொம்மன் ஆகிய இரண்டு கும்கி யானைகளை வரவழைக்கப்பட்டு பிதர்காடு வனவர் ரவி பந்தலூர் பந்தலூர் வனவர் சஞ்சீவி ஒவேலிவனவர் சுரேஷ் கூடலூர் வனவர் ராதாகிருஷ்ணன் வனவர் எலியாஸ் வீரன் வனத்துறை டீம் ஒன்றிணைந்து கும்கி யானை உதவியுடன் ஊருக்குள் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர் ஓரிரு நாட்களில் யானைகள் வனத்திக்குள் விரட்டியடிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது