நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி ஏலம் மன்னா என்ற பகுதியில் காட்டு யானை ரேஷன் கடையை அடித்து நொறுக்கியது மக்களுக்கு விநியோகம் செய்ய இருந்த ரேஷன் பொருட்களை எடுத்து சூறையாடியது பந்தலூர் தாலுக்கா பகுதியில் கடந்த சில நாட்களாக யானை கரடி போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசங்களை செய்து வருகின்றன இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையில் சற்று முடங்கியுள்ளது இந்நிலையில் அதிகாலை சுமார் இரண்டு முப்பது மணி அளவில் காட்டு யானை ஏலம் மன்னா என்ற பகுதியில் உள்ள நியாய விலை கடையில் உள்ள பொருட்களை சூறையாடியது இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது இதனால் பந்தலூர் வாழ் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்