திருநெல்வேலி-தூத்துக்குடி வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் 7 ஆவது முறையாக மீண்டும் ஓட்டை.!! - தொடரும் சுங்க வசூல் முடிவுக்கு வருமா.!?

 திருநெல்வேலி-தூத்துக்குடி வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் 7 ஆவது முறையாக மீண்டும் ஓட்டை.!! - தொடரும் சுங்க வசூல் முடிவுக்கு வருமா.!?

கன்னியாகுமரி- காஷ்மீர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில், திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 2013-ம்ஆண்டு முடிவடைந்து வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இந்த நான்குவழிச் சாலையில் வல்லநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பெரிய நான்குவழிப் பாலம் அமைக்கப்பட்டது.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கேரளா மற்றும் நெல்லை, குமரி, தென்காசி பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் இறக்குமதி சாமான்கள், காற்றாலை உபகரணங்கள், மரத்தடிகள், ஏற்றுமதி செய்யப்படும் சரக்கு பெட்டக வாகனங்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் இவ்வழியே சென்று வருகிறது.

இந்த பாலம் அடிக்கடி சேதமடைந்து வருகிறது. பாலம் கட்டப்பட்டு நான்கு ஆண்டுகளில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலத்தின் ஒரு பகுதியில் (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) நடுவே பெரிய ஓட்டை விழுந்தது. இதனால் சுமார் 6 மாத காலம் இந்த பாதையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் ரூ.3.14 கோடி ஒதுக்கப்பட்டு பாலம் சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி பாலத்தின் மற்றொரு பகுதியில் (தூத்துக்குடி- திருநெல்வேலி வழித்தடம்) 2 பெரிய ஓட்டைகள் விழுந்து சேதம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.அனைத்து வாகனங்களும் ஒருவழிப் பாதை (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) வழியாக திருப்பி விடப்பட்டன. பாலம் சேதமடைந்து இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்ட போதிலும், இன்னும் சீரமைக்கப்படாததால் வாகனங்கள் அனைத்தும் தற்போது வரை ஒருவழிப் பாதை வழியாகவே சென்று வருகின்றன.

வாகனங்கள் அனைத்தும் சென்று வரும் ஒருவழிப் பாதை (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) கடந்த 2021 நவம்பர் மாதம் 2-ம் தேதி மீண்டும் சேதம் ஏற்பட்டது. பாலத்தில் திடீர் ஓட்டை விழுந்ததால், அந்த பகுதியை தேசிய நெடுஞ்சாலை துறையினர் தற்காலிகமாக சீரமைத்தனர். சாலை தடுப்புகளை போட்டு மறைத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். 

இதனால் வாகனங்கள் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக ஒருவழிப் பாதையில் செல்வதால் வாகன ஓட்டிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் இந்தப் பாலத்தை கடக்க வாகன ஓட்டிகள் திண்டாடுகின்றனர்.ஒரே நேரத்தில் அதிக வாகனங்கள் செல்லும் போது பாலம் அதிர்வதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே கடக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் அதே ஒரு வழிப் பாதை பாலப் பகுதியில் இன்று மீண்டும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாலத்தின் மேற்பரப்பில் பெரிய கீறல்கள் விழுந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து சாலையில் ஏற்பட்ட சேதத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சேதமடைந்த பகுதியை சுற்றி தடுப்புகளை ஏற்படுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த 4 வழி சாலை சேதம் அடைந்திருப்பதாக கூறி சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என ஜஸ்டின், சிதம்பரம் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின் போது வாகைக்குளம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 50% கட்டணம் மட்டும் வசூலிக்க உத்தரவிட்டனர். ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தினர் இதனை நிறைவேற்றவில்லை. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தர், பரதசக்கரவர்த்தி அமர்வு முன் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது சுங்கச்சாவடி கட்டணத்தை பாதியாக குறைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய இயக்குநர் தாங்கள் மனமிறங்கி 50% கட்டணம் வசூலித்ததாக அறிக்கை அளித்துள்ளார். இது ஏற்க கூடியது அல்ல. சுங்கச்சாவடி நிர்வாக இயக்குநர்கள் தனி அதிகாரம் படைத்தவர்களா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர மனுதாரர்களுக்கு அனுமதி அளித்த நீதிபதிகள் ஏற்கெனவே பிறப்பித்த 50% கட்டண வசூல் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததுடன், வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். இதனால் சாலைகள் மோசமடைந்து பாலம் போக்கு வரத்திற்க்கு லாயக்கில்லாத நிலையிலும் வாகைக்குளம் சுங்கச்சாவடியில் கட்டணக் கொள்ளை தொடர்வது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post