தூத்துக்குடி : "கலப்பட கருப்பட்டியை கண்டுபிடிக்க 6 மாதத்தில் புதிய தொழில்நுட்பம்" - விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்.!


 தூத்துக்குடி :  "கலப்பட கருப்பட்டியை கண்டுபிடிக்க 6 மாதத்தில் புதிய தொழில்நுட்பம்" - விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்.!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் இதுநாள் வரை 213.44 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது. பாபநாசம் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 425.127 கன அடியாக உள்ளது. 504.75 கன அடி நீர் தற்போது திறந்துவிடப்படுகிறது.

தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் 91 மெ.டன், கம்பு 53.4 மெ.டன், உளுந்து 172.1 மெ.டன், பாசிப்பயறு 15.4 மெ.டன்;; நிலக்கடலை 1.0 மெ.டன் சூரியகாந்தி 9.2 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் 2300 மெ.டன் யூரியா, 2651 மெ.டன் காம்ப்ளக்ஸ், 2645 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 458 மெ.டன் பொட்டாஷ் உரங்கள் இருப்பில் உள்ளன.

நடப்பு அக்டோபர்;, 2023 மாத தேவைக்கு நமது மாவட்டத்திற்கு 4300 மெ.டன் யூரியா, 1240 மெ.டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 1000 மெ.டன் டி.ஏ.பி ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட உர நிறுவனங்களால் இம்மாத தேவைக்கான உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

2021-22ம் ஆண்டு ராபிபருவத்தில் பிரதமமந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உளுந்து பயிருக்கு  ரூ.13.23 கோடி,பாசிப்பயறுக்கு ரூ.4.69 கோடி, சூரியகாந்தி பயிருக்கு ரூ.0.84 கோடி,நெல் பயிருக்கு ரூ.5.23 கோடி,மக்காச்சோளம் பயிருக்கு 15.67 கோடி,கம்புபயிருக்கு ரூ.4.08 கோடி,பருத்தி பயிருக்கு 3.83 கோடி, நிலக்கடலை பயிருக்கு ரூ.0.21 கோடி, எள் பயிருக்கு ரூ.0.03 கோடி,சோளம் பயிருக்கு ரூ.4.43 கோடி என மொத்தம் ரூ.52.24 கோடி, 46756 விவசாயிகளுக்கு இப்கோ-டோக்கியோ காப்பீட்டு நிறுவனத்தால்; பயிர் காப்பீட்டுத் தொகைவிடு விக்கப்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டில் மிகைபரப்பில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு சரியான பரப்பிற்கான காப்பீட்டுத் தொகையாக ரூ.1.10 கோடி இப்கோ-டோக்கியோ காப்பீடு நிறுவனத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது.

2023-24ம் ஆண்டிற்கு பயிர் காப்பீடு செய்ய உளுந்து,பாசிப்பயறு,மக்காச்சோளம்,சோளம்,கம்பு, சூரியகாந்தி, எள்,நிலக்கடலை,பருத்தி,நெல் ஆகிய பயிர்களுக்கு அரசினால் அறிவிக்கை செய்யப்பட்டு இணையத்தில் பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பயிர்காப்பீடு செய்வதற்கு கடைசி நாளாக உளுந்து,பாசிப்பயறு பயிர்களுக்கு 15.11.2023, மக்காச்சோளம்,பருத்தி பயிர்களுக்கு 30.11.2023,நிலக்கடலை, சோளம் பயிர்களுக்கு 15.12.2023,கம்பு, சூரியகாந்தி, எள் பயிர்களுக்கு 30.12.2023,நெல் பயிருக்கு 31.01.2024,கொத்தமல்லி 18.01.2024,வெங்காயம் 31.01.2024 சிவப்புமிளகாய் 31.01.2024,வெண்டை 15.02.2024 வாழை 29.02.2024 என அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞரின் அனைத்துகிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சிதிட்டம் 2021-2022-ஆம் ஆண்டில் 48 கிராமங்கள் தேர்வுசெய்யப்பட்டது.  இதில்,கிராமபஞ்சாயத்துக்களில் உள்ள தரிசு நிலங்களின் அடிப்படையில் 35 தரிசுநிலதொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்ததரிசுநிலங்களில் 34 ஆழ்துளை கிணறுகள் 30 தொகுப்புகளில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 11 தொகுப்புகளில் சுமார் 74 ஏக்கர் பரப்பளவில் சொட்டுநீர்ப்பாசனம் நிறுவும் பணிகள் முடிவடைந்து முருங்கை, நெல்லி,எலுமிச்சை,கொய்யா போன்ற பயிர்கள் பயிரிடும் பணி நடைபெற்று வருகிறது. 

2022-2023-ஆம் ஆண்டில் இத்திட்டம் 120 கிராமபஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்பட்டது. கிராமபஞ்சாயத்துக்களில் உள்ள தரிசு நிலங்களின் அடிப்படையில் இதுவரை 52 தரிசு நில தொகுப்புகள் கண்டறியபட்டது. இவற்றுள் 12 தொகுப்புகளில் 12 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 2022-23 ஆம் ஆண்டில் 71280 எண்ணம் தென்னங் கன்றுகளும், 7326 லிட்டர் திரவஉயிர் உரமும், 1485 மின்கலன் மூலம் இயங்கும் தெளிப்பான் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

2023-24 ஆம் ஆண்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் 87 கிராம பஞ்சாயத்துகளில், தரிசு நிலங்களின்; அடிப்படையில் இதுவரை 9 தரிசுநிலதொகுப்புகள் அமைக்கப்பட்டு முட்புதர்கள் அகற்றப்பட்டுள்ளது. 2023-24ல் தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துகளுக்கு இதுவரை 32350 எண்ணம் தென்னங்கன்றுகளும், 5266 லிட்டர் திரவஉயிர் உரமும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

நமது மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 34 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில15 எணகள் சிறப்புற செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் அதன் உறுப்பினர்கள் மட்டும் அல்லாது இதர விவசாய பெருமக்களின் விளை பொருட்களை நடப்பு சந்தை விலையில் கொள்முதல் செய்வதுடன் அவர்களுக்கு தேவையான விவசாய இடு பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் இதனை பயன்படுத்தி சரியான விலையில் இடு பொருட்கள் பெறுவதுடன் விளை பொருட்களை விற்று பயனடையவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

சீனி கலந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியை கண்ட றியும் தொழில்நுட்பம் தற்போது இல்லை. இதுதொ டர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்துக்கு முன்வடிவு அனுப்பப்பட்டு உள்ளது. ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. இன்னும் 3 முதல் 6 மாதங்களுக்குள் அதற்கான தொழில்நுட்பம் வந்துவிடும். அப்போது இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, சிறுதானிய தொழில்நுட்பக் கையேட்டினை வெளியிட்டு விவசாயிகளிடம் வழங்கினார். அதனைத்தொடர்ந்து வோளண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆகிய துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கருத்துக்கண்காட்சியினை பார்வையிட்டு, திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின்ராணி, மண்டல இணை இயக்குநர் (கூட்டுறவுச் சங்கங்கள்) முரளி கண்ணன், மேலாண்மை இயக்குநர் (மா.ம.கூ.வ) நடுக்காட்டுராஜா, மாவட்ட நியமன அலுவலர் மரு.மாரியப்பன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post