தூத்துக்குடி வழக்கறிஞர் உட்பட 6 வழக்கறிஞர்கள் பணி செய்ய தடை - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு !
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தூத்துக்குடி ஸ்ரீ வைகுண்டம் மற்றும் சேலத்தை சேர்ந்த இரு வழக்கறிஞர்கள் உள்பட ஆறு வழக்கறிஞர்களுக்கு, தொழில் புரிய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த தெய்வகண்ணன், சேலம் தடாகப்பட்டியை சேர்ந்த தியாகராஜன் ஆகிய இரு வழக்கறிஞர்களும் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை இருவரும் எந்த நீதிமன்றங்களிலும், தீர்ப் பாயங்களிலும் ஆஜராக தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இதே போல, வேலையில் இருந்ததை மறைத்து வழக்கறிஞராக பதிவு செய்ததாக சென் னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதர், குற்ற வழக்கை மறைத்ததாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வினோத்குமார் என்பவருக்கும் பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.
இதுதவிர அம்பத்தூர் நீதிமன்றத்தில் போதையில் தகராறில் ஈடுபட்ட ஆவ டியை சேர்ந்த சுந்தர்ராஜன், அம்பத்தூ ரைச் சேர்ந்த கணேசன் ஆகியோருக்கும் தொழில் புரிய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தர விட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஆதிகேசவன் என்பவ ருக்கு 2022ம் ஆண்டு மே மாதம் தடை விதிக்கப்பட்டது. வழக்கு முடித்து வைக்கப்பட்டதையடுத்து அவர் மீதான தடை உத்தரவு ரத்து செய்யப்படுவதாக பார் கவுன்சில் அறிவித்துள்ளது.