தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை உரிய நேரத்தில் தராமல் ஏமாற்றிய கர்நாடக அரசை கண்டித்தும் மத்திய அரசால் அமைக்கப்பட்டு கர்நாடக அரசிற்கு காவிரியில் நீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்காமல் ஒரு தலைப்பட்சமாக கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.இதனை தொடர்ந்து மத்திய அரசு உரிய நடவடிக்கை ஏற்க தவறும் பட்சத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்து டெல்லியில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர். போராட்டத்தின் போது ஜங்ஷன் ரயில் நிலையத்திற்குள் உள்ளே போக முயன்றதால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் பழனி முருகன், மாநில பொருளாளர் ராஜேஷ், மாநில செயலாளர் வேல் நாயக்கர் உட்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்