சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை 35 ஆண்டு விழாவை வரும் 23.10.2023 அன்று கொண்டாட இருக்கும் இந்த நாளில் மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் பற்றி ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அர்த்தநாரி MS., அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது. ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை கடந்த 1988ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் எந்த விதமான தரமான மருத்துவ சிகிச்சையும் இல்லாத சூழ்நிலையில் தமது மருத்தவ சேவையை தொடங்கி, பலவிதமான சேவைகளை நமது தமிழகத்திற்கே முன்மாதிரியாக கொண்டு , வெற்றி நடை போட்டு கொண்டிருகின்றது. உதாரனத்திற்க்கு ஒருங்கிணைத்த அதி நவீன ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை , சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலேயே முதன் முதலாக CCT SCAN மற்றும் MRI SCAN , மேலும் நவீன இரத்த பரிசோதனை ஆய்வகம் ஆகியவையாகும்.மேலும் தற்போது , இருதய மற்றும் இருதய அறுவை சிகிச்சைக்கு சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலேயே தலை சிறந்த மருத்துவமனையாக நமது ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை திகழ்கிறது . மேலும் தலைசிறந்த நவீன கேத் லேப் மற்றும் இருதய அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் 24 மணி நேரமும் தலை சிறந்த இருதய நிபுணர் மற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் இங்கு முழுநேர பணி செய்துகொண்டிருகிறார்கள்.மேலும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையானது ,ஒவ்வொரு வருடத்திற்கும்,ஒரு நவீன புதிய வசதிகளை ஏற்படுத்தி கொண்டு, அணைத்து விதமான மக்களுக்கும் நல்ல தரமான மருத்துவ சேவைகளை சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார மக்களுக்கு வழங்கி கோயம்பத்தூர் , பெங்களூர் மற்றும் சென்னையில் கிடைக்கும் அதி நவீன மருத்துவ சிகிச்சைகளை சேலத்திலேயே கிடைக்கும்படி செய்து கொண்டு இருகின்றது.மேலும் இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் டாக்டர் ஜெயதேவ் , டாக்டர் மோகன் , டாக்டர் ஜோ மர்ஷேல் லியோ டாக்டர் விஜய்ஆனந்த் பழனிசாமி மற்றும் டாக்டர் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.
சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்