நாகையிலிருந்து இலங்கை கப்பல் கட்டணம் ரூ.2803- இன்று ஒரு நாள் மட்டும் சலுகை.!


 நாகையிலிருந்து இலங்கை கப்பல் கட்டணம் ரூ.2803- இன்று ஒரு நாள் மட்டும் சலுகை.!


நாகையிலிருந்து இலங்கை செல்ல நபர் ஒருவருக்கு 7 ஆயிரத்து 670 ரூபாயாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

துவக்க நாள் சலுகையாக இன்று ஒருநாள் மட்டும் நபர் ஒருவருக்கு 2 ஆயிரத்து 803 ரூபாயாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.


நாகப்பட்டினம் : நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணியர் கப்பல் போக்குவரத்து கடந்த 10ம் தேதி துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக சிக்கல்களால் துவக்க தேதி இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது.


இந்நிலையில் இன்று காலை 8:15 மணிக்கு நாகையில் இருந்து இலங்கைக்கு பயணியர் கப்பல் புறப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர் சர்வானந்த சோனாவால் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக கப்பல் பயணத்தை துவக்கி வைக்கின்றனர். பிரதமர் மோடி காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்குகிறார். துவக்க நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பங்கேற்கிறார்.


இன்று ஒரு நாள் மட்டும் துவக்க தினத்தை முன்னிட்டு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை கட்டணமாக வரிகளுடன் சேர்த்து 2800 ரூபாய்.


சாதாரணமாக நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிக்க 6500 ரூபாய் மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து 7670 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


நாள் தோறும் நாகையிலிருந்து காலை 7:00 மணிக்கு புறப்படும் 'சிரியா பாணி' என்ற கப்பல் மதியம் 12:00 மணிக்கு இலங்கை காங்கேசன் துறையை சென்றடையும். மதியம் 1:30 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு மாலை 5:30 மணிக்கு நாகை வந்தடையும்.

Previous Post Next Post