தூத்துக்குடி மாவட்டத்தின் 27வது ஆட்சியராக லட்சுமிபதி பொறுப்பேற்பு!


 தூத்துக்குடி மாவட்டத்தின் 27வது ஆட்சியராக லட்சுமிபதி பொறுப்பேற்பு!


தூத்துக்குடி மாவட்டத்தின் 27வது புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக கோ.லட்சுமிபதி இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த செந்தில்ராஜ், தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து செங்கல்பட்டு சார் ஆட்சியராக பணிபுரிந்து வந்த லட்சுமிபதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். 


புதிய லட்சுமிபதி கூறுகையில்,‘ தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அனைத்து திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். நல்ல நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவோம். ’ என்று கூறினார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தின் 27வது ஆட்சியர் ஆவார்.

Previous Post Next Post