அமெரிக்கா: 22 பேர் சுட்டுக்கொலை - விளையாட்டு மைதானம், உணவுவிடுதி மற்றும் பார்களில் புகுந்த மர்ம நபர் வெறிச்செயல்.!
லூயிஸ்டன்: அமெரிக்காவின் லூயிஸ்டன் சிட்டியில் நபரின் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 40 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
விளையாட்டு மைதானம், உணவுவிடுதி மற்றும் பார்களில் புகுந்து ஒருவர் வெறிச்செயலில் ஈடுபட்டார். கண்ணில் கண்டவர்களை சுட்டார். இதுவரை 22 பேர் பலியானதாக கூறப்படுகிறது.
மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. துப்பாக்கியால் சுட்ட நபர் ராபர்ட் ஆர். கார்டு, 40, என மாநில மற்றும் உள்ளூர் போலீசார் புகைப்படங்களை முகநூலில் இடுகையிட்ட பிறகு, இந்த வழக்கில் ஆர்வமுள்ள நபராக அடையாளம் கண்டுள்ளனர்.