2024ல் மீண்டும்நரேந்திரமோடி தலைமையிலான அரசு - சத்தியமங்கலத்தில் அண்ணாமலை பேச்சு.


ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலத் தில்,பாரதிய ஜனதா கட்சியின் மாநி லதலைவர்அண்ணாமலையின்,என் மண்' என் மக்கள் பாத யாத்திரை நிகழ்ச்சி, தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணா மலை தலைமையில்,சத்திகோட்டு வீராம்பாளையத்தில்துவங்கி,சத்திமார்க்கெட்,கடை விதி,ஆற்றுபாலம் ,மைசூர் சாலை, எஸ்.பி.எஸ் கார்னர் வழியாக பேருந்து நிலையம் அடை ந்து,பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது .கூட்டத்தில் பேசிய அண்ணாமலை பேசுகையில், தமிழகத்தில், தாசில் தார் அலுவலகம் முதல் கோட்டை வரை ஊழல், ஊழல்,லஞ்சம். தமிழ் நாடு அரசு அதிக அளவில் கடன் வாங்கி, கடன் வாங்குவதில் தான் இந்தியாவில்முதலிடம்வகிக்கிறது. மகளிர் உரிமைத் தொகை 1000 வழ ங்குவதால், தாங்கள்தான் வெற்றி பெறப் போகிறோம் என திமுகவின ர்  சொல்கிறார்கள். திமுக ஆட்சி அமைந்தபின், 5 முறை ஆவின் பால் விலைஉயர்ந்துள்ளது.சொத்து வரி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது .பிரதமர் மோடி இந்தியை திணிப்ப தாகச் சொல்கிறார்கள், ஆனால் செல்லுமிடமெல்லாம் தமிழ் மொழி யைதான் திணித்து வருகிறார். 

ஈரோடு மக்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அமைச்சர் முருகன் முயற்சியில், தேசிய மஞ்சள் வாரி யம், பிரதமர் மோடி ஆட்சியில்அமை க்கப்பட்டுள்ளது.ஈரோட்டில் 3அமைச் சர்கள் இருந்தும் எதுவும் நடக்க வில் லை.தமிழகத்திற்கு,மோடிஎன்னசெய்தார் என்று முதல்வர்ஸ்டாலின் கேட்கிறார். நான் ஈரோடு மாவட்டத் திற்கு செய்ததை மட் டும் இங்கே பட்டியலிடுகிறேன். 5 லட்சம் வரை யிலான ஆயுஷ் நிர்மான் காப்பீடு திட்டத்தில் 1,84,153 பேர் பயன் பெற் றுள்ளனர்.பி.எம்.கிஷான்திட்டத்தில் 95782 விவசாயிகள் ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம் உதவித் தொகை பெறுகின் றனர். முத்ரா திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 4683 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் திட்டத்தின் மூலம், 37,838 பேருக்கு வீடுகள், ஜல்ஜீவன் திட்டத்தில், 2, 14,875 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கள் 1,08,883 இல வசகழிப்பறைகள், 1,02, 689 பேரு க்கு இலவச சிலிண்டர் என ஏழை மக்கள் பயன் பெற்று உள்ளனர் என் றார்.கூட்டத்திலும்,யாத்திரையிலும் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், 'பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் மாநில நிர்வாகிகள், ஜி. கே .நாகராஜ், பழனிச்சாமி, மாவ ட்ட தலைவர் கலைவாணி விஜய குமார். வழக்கறிஞர் அஜித்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் சரவ ணக்குமார்,சும்பிரமணியம், செல்வ ராஜ்,ஈஸ்வரமூர்த்தி, நகர்மன்ற உறு ப்பினர்கள் அரவிந்த் சாகர், உமா கார்த்திகேயன் மற்றும் கதிர்வேல், செந்தில்குமார் உள்ளிட்டோரும்,புளி யம்பட்டி, பவானிசாகர், தாளவாடி, கடம்பூர் பகுதி பாஜக நிர்வாகிகள் பொது மக்கள் உட்பட ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் பாத யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



Previous Post Next Post