தூத்துக்குடி : அதிகாலை விபத்து - பைக் - கார் மோதலில் 2 வாலிபர்கள் பலி , இருவர் படுகாயம்.!
தூத்துக்குடியில் அதிகாலை பைக்குகள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர் 2 பேர் படுகாயம் அடைந்தனர்
தூத்துக்குடி ஐயப்பன் நகர் 3வது தெருவில் வசிப்பவர் பால்பாண்டி மகன் ஹரி (26). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் தளவாய் மகன் பாலா (22) இருவரும் நண்பர்கள் நேற்று இரவு 2 பேரும் தசரா திருவிழாவை முன்னிட்டு முத்தாரம்மன் கோவிலுக்கு விரதம் இருந்து மாலை அணிவிப்பதற்காக தூத்துக்குடி தெர்மல் நகர் கோயில் பிள்ளை விலையில் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று விட்டு மாலை அணிந்து விட்டு இன்று அதிகாலை 3 மணி அளவில் பைக்கில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
தூத்துக்குடி பீச் ரோடு மத்திய கடல் ஆராய்ச்சி மீன் வளர்ச்சி கழகம் அலுவலகம் அருகே வரும்போது எதிரே வந்த ஒரு கார் பைக் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஹரி தலையில் பலத்த காயமடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார் பாலா படுகாயம் அடைந்தார்.
இதற்கிடையே அந்த கார் அதிவேகமாக பைக் மீது மோதிவிட்டு சென்றதில் மற்றொரு பைக்கு மீது மோதி நின்றது இதில் அந்த பைக்கில் வந்த அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரியும் தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்த சண்முகவேல் மகன் வன்னிய ராஜா வயது (35) குரூஸ் புரத்தை சேர்ந்த ரவி (27) இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் வன்னியராஜா அதே இடத்தில் பரிதாமாக இருந்தார் ரவி பலத்த காயத்துடன் தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஹரி மற்றும் வன்னிய ராஜா இருவர் பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த தூத்துக்குடி போல் பேட்டையை சேர்ந்த பாலச்சந்திரன் மகன் விஜய் கணேஷ் (30) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பைக் மீது கார் மோதி விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.