மேல்மருவத்தூர் - பங்காரு அடிகளார் உடல்
ஆதிபராசக்தி கோயில் கருவறையின் பின்புறம் உள்ள மண்டபத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.!
அம்மா என்று பக்தர்களால் போற்றப்படும்
பங்காரு அடிகளார் நேற்று (அக்-19)
ஆதிபராசக்தியின் திருவடியை அடைந்தார். அவரது உடல் சித்தர் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது
அவருக்கு வயது 82. அவரது உடலுக்கு ஓம்சக்தி பக்தர்கள் திரளாக நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல்
தெரிவித்துள்ளனர்.
பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி
தொண்டு மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக
இருந்தவர். இவரைப் பின்பற்றுபவர்களாலும், ஆதிபராசக்தி
கோயிலின் பக்தர்களாலும் பங்காரு அடிகளார் அம்மா என்று அழைக்கப்பட்டு
வந்தார்.
பெண்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் காட்சி இங்கு சிறப்பாகும். மேல் மருவத்தூரில் சுயம்பு வடிவத்தில் அன்னை எழுந்தருளியுள்ள இடத்தில் ஒரு பெரிய பெண் சித்தர் இருக்கின்றார். அவரே சித்தர்களின் தலைவியான ஆதிபராசக்தி ஆவாள். இந்த புண்ணிய பூமியில் ஒரு சித்தர் கூட்டமே உறைகின்றது. கோயிலின் வடபுறம் நஞ்சை நிலம் இருந்தது. இந்த வயல் பகுதியில் இங்கு வந்து இரவில் தங்கும் பக்தர்களின் வசதியைக் கருதி ஒரு கீற்றுக்கொட்டகையாவது அமைக்க வேண்டும் என சில அன்பர்கள் விரும்பினர். அந்த இடத்தில் கொட்டகை அமைக்க அன்னையின் உத்தரவு கிடைக்கவில்லை மேலும் அந்த நிலத்தில் அடியில் பல சித்தர்கள் இருப்பதாகவும் பங்காரு அடிகளார் தெரிவித்தார். எனவே தான் இந்தக் கோயிலை சித்தர்பீடம் என்று அழைத்தனர். பெண்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் காட்சியை பிற கோயில்களில் காண முடியாது.
ஆண்டுதோறும் பெண்களே கோயில் விழாவை கொண்டாடுகின்றனர் கருவறைக்குள் சென்று செய்கின்றனர். மாத விலக்கு என்பது வழக்கமாக வரும் உபாதை என்பதால் அது பற்றியும் பெரிதுபடுத்தி பேசவேண்டியதில்லை என்று கூறியவர் பங்காரு அடிகளார்.
பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி சக்தி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி, அமர வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலை அமர வைத்து வில்வம், உப்பு, வேப்பிலை உள்ளிட்ட பொருட்களுடன், அவர் எப்போதும் அமர்ந்து அருள்வாக்கு தரும் இடமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் கருவறையின் பின்புறம் உள்ள புற்று மண்டபத்தில் சித்தர் முறைப்படி அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். முன்னதாக மாலை 4:30 மணியளவில் பங்காருமாலை 4:30 மணியளவில் பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாலை 5:15 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.