ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பவானிசாகர் அருகே,அய்யம்பாளை யம் கிராமத்திற்குள் புகுந்து, விவ சாய பயிர்களை சேதப்படுத்தி கிரா ம மக்களை அச்சுறுத்திய, ஒற்றைக் காட்டு யானையை பிடிக்க 15பேர் கொண்ட வனக் குழுவினர் விளா முண்டி வனப் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட விளாமுன்டி வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியே றிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று சித்தன் குட்டை, அய்யம்பாளையம் ஆகிய கிராம பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள், பகல் நேரத்தில் புகுந்து, விவசாய பயிர் களைசேதப்படுத்தி,கிராம மக்களை அச்சுறுத்தி வந்தது.இது குறித்து கிராம மக்கள், அந்த ஒற்றை காட்டு யானை பிடித்து, வேறு பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து, ஒற்றை காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க, வனத்துறையினர் முடிவு செய்து, ஆனமலை புலிகள் காப்ப கத்தில் இருந்து கபில்தேவ் மற்றும் முத்து என்ற கும்கி யானைகள் வர வழைத்துள்ளனர்.
நேற்று விளாமுண்டி வனப் பகுதி யில், ஒற்றைக் காட்டுயானையின் நடமாட்டம் குறித்து,15 பேர் கொண்ட (ஆன மலை புலிகள் காப்பகத்தில் இருந்து வந்த) யானைகள் மீட்பு குழு வினர் மற்றும் வனத்துறையினர் அடர்ந்தவனப்பகுதிக்குள், ஒற்றைக் காட்டு யானையை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.