இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் 114 பேர் தமிழக அரசிடம் உதவி
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிய நகரங்கள் மீது தொடர்ச்சியான திடீர் தாக்குதல்களை நடத்தியதால், பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது,
இதனையடுத்து இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப உதவுவதற்காக " ஆபரேஷன் அஜய் " என்ற திட்டத்தை இந்தியா புதன்கிழமை அறிவித்தது.
வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, சுமார் 18,000 இந்தியர்கள் தற்போது இஸ்ரேலில் வசிக்கின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேலில் இருக்கும் தமிழர்கள் 114 பேர் தமிழக அரசிடம் உதவி கேட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த 114 பேரும் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இந்தியா வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.