இருளில் மூழ்கிய குரோம்பேட்டை நகரும் நடை மேம்பாலம் செல் போன் வெளிச்சத்தில் அச்சத்துடன் கடந்து செல்லும் பொது மக்கள்
தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட குரோம்பேட்டை பேருந்து நிருத்தம் அருகே GST சாலை கடப்பதற்க்காக கடந்த ஆட்சியில் சுமார் 7கோடி திட்ட மதிப்பீட்டில் நகரும் நடை மேம்பாலம் பொது மக்கள் பண்பாட்டிர்க்காக கட்டப்பட்டது. தற்போது அதனை முறையாக பராமரிப்பு இல்லாததால் அவ்வப்போது பழுதாகி நிற்கிறது. இது ஒருபுறம் இருக்க நடை மேம்பாலம் அருகே சுரங்க பாதை பணி மந்தகதியில் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது தினமும் இரவு நேரங்களில் நடை மேம்பாலத்த்தில் மின்சார துண்டிப்பதால் நடை மேம்பாலம் முழுவதும் இருள் சூழ்ந்து கான படுகிறது அதன் பொது மக்கள் தங்களது கை பேசில் விளக்கை ஒளிர விட்டவரு அந்த வெளிச்சத்தில் நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது மேலும் இது போன்ற இரவு நேரத்தில் நடை மேம்பாலத்தில் மின் விளக்கு எரியாத போது பல் வேறு குற்ற சம்பவங்கள் நடை பெருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் ஒரு நபர் இந்த வழியே இருளில் செல்லும் போது ஒரு சமுக விரோதி 200ரூபாய் பணம் கேட்டு பிளேடால் முகத்தை கிழித்து விட்டு தப்பி ஓடியுள்ளர் இதனை தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் இந்த நடை மேம்பாலத்தில் இரவு நேரத்தில் தடை இல்லாத மின் விளக்கு எரிய செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்