சத்தியமங்கலம் நகராட்சி, நகர் மன்ற கூட்டம், நகர் மன்ற தலைவர் ஆர்.ஜானகிராமசாமிதலைமையில் நகராட்சி ஆணையாளர் செல்வம், துணைத் தலைவர் நடராஜ் ஆகி யோர் முன்னிலையில் நடை பெற் றது. கூட்டத்தில் நகர்மன்ற உறுப் பினர்கள் தங்களது வார்டுக்குட்பட்ட பொது மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் கீழ்கண்ட விவாதங்கள் நடை பெற் றது.வேலுசாமி(தி.மு.க.):- புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என்றும், தினசரி மார்க்கெட்டில் விவசாயிக ளும், காய்கறிகளை விற்பனைக் காக கொண்டு வருகின்றனர். அவர் களுக்கும் இடம் ஒதுக்கி தர வேண் டும். அங்கு கழிவுநீர் மற்றும் மழை நீர் வடிகால்அமைக்கப்படவேண்டும் மேலும் மார்க்கெட் வளாக சுற்று சுவரை பராமரிக்க வேண்டும். தலைவர் ஜானகி ராமசாமி - பணி கள் தற்போது நடைபெற்று கொண் டிருக்கிறது. விரைவில் மார்க்கெட் திறக்கப்படும். விவசாயிகளுக்கும் உரிய இடவசதி செய்து தரப்படும். முறையான வடிகால் வசதி அமைக் கப்படவுள்ளது.சுற்றுச்சுவர்அமைக்க ஆய்வு செய்த பின் நடவடிக்கை எடு க்கப்படும். நாகராஜன்- (கொ.ம.க). டெண்டர் டேவணித் தொகையை கால தாமதமின்றி திரும்ப தர நட வடிக்கை எடுக்க வேண்டும். தலைவர்-சம்பந்தப்பட்ட அலுவலர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும். லட்சுமி(தி.மு.க.) பாதாள சாக்கடை திட்டத்தில், வீடு களுக்கு இணைப்பு கொடுக்க, பொதுமக்களிடம் அதிக அளவில் பணம் வசூல் செய்யப்படுகிறது. தலைவர்-சம்பந்தப்பட்ட ஒப்பந்த தாரரிடம் இது குறித்து விசாரனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அரவிந்த்சாகர் (பா. ஜனதா) எனது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. கோர்ட்டுக்கு முன்பு கழிவுநீர் வடி கால் அமைக்க வேண்டும். பொறியாளர்கதிர்வேலு, கோர்ட்டு முன்பு கழிவுநீர் வடிகால் அமைக்க ஆய்வு செய்து, உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.லட்சுமணன் (அதிமுக)எனது வார்டு பவானி ஆற்று படித்துறையில், கொட்டப்பட்ட மண்ணை அப்புறப்
படுத்தி, பொதுமக்கள் பவானி ஆற்று படித்துறையை பயன்படுத்த
ஏற்பாடு செய்ய வேண்டும்.
நகராட்சி தலைவர். விரைவில் மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.சீனிவாசன் (தி.மு.க.):-திருமலை நகரில் கழிவுநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும். மேலும் மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும்.தலைவர்-நேரில் பார்வை யிட்டு,ஆவண செய்யப்படும்.
புவனேஸ்வரி குமார்-தேர்ந்தெடுக்க
பட்ட நகர்மன்ற உறுப்பினர்களுக்கு
நகராட்சி நிர்வாகம் குறித்த பயிற்சி
அளிக்க வேண்டும் - நகர்மன்ற தலைவர். மாநில மற்றும் மண்டல அளவில் நகராட்சி நிர்வாக துறை யினர் பயிற்சிக்கு திட்டமிடுகின்ற னர். விரைவில் பயிற்சி அளிக்க வலியுறுத்தப்படும்.திருநாவுக்கரசு - (பா.ம.க) எனது வார்டு குடிநீர் பிரச் சனைக்கு, தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தலைவர். விரை வில் நடவடிக்கை எடுக்கப்படும்.உமா (பாஜக) தற்போது எங்கும் டெங்கு காய்ச்சல் வந்துள்ளது. சாக்கடை சுத்தம் செய்து, கொசு மருந்து தெளிக்க வேண்டும்.கஷாயம் தர வேண்டும்.
துப்புரவு அலுவலர் சக்திவேல் -
சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில்
யாரும் பெங்கு காய்ச்சலால் பாதிக் கப் படவில்லை- நகர் மன்றத் தலை வர். கஷாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற கூட்டத் தில் விவாதம் நடந்தது. நகர் மன்ற கூட்டத்தில்,மொத்தம் 23 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.இந்த கூட்டத்தில் நகர சுகாதார அலுவலர் சக்தி வேல், பொறியாளர் கதிரவன் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர் கள் கலந்து கொண்டனர்.