குடிநீர் வீணாகலாமா பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பந்தலூர் அட்டி பகுதியில் சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து  வருகின்றனர் இந்த நிலையில் அப்பகுதியில் சாலைப் பணி நடைபெறுவதாக கூறி நெல்லியாளம்  நகராட்சி அத்தியாவசியமான குடிநீர் குழாய் கழற்றி போட்டு உள்ளனர் இதனால் குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது பந்தலூர் அட்டி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதியை சுமார் 100 குடும்பங்கள்  கடந்த மூன்று நாட்களாக குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமம் அடைந்து உள்ளனர் இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வர்லர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர் நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர் குழாய்களை சரி செய்து அப்பகுதி மக்களுக்கு உரிய குடிநீர் வசதிகளை உடனடியாக செய்து கொடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Previous Post Next Post