அசெம்ப்ளியில் பிராமணர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாதது சமூக அநீதி... எஸ்.வி.சேகர் பேட்டி

 ஒரே நாடு ஒரே தேர்தல் 2026 இல் கூட நடைமுறைப்படுத்துவது சாத்தியமல்ல, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்காது. அதிமுக தலைமையில் தான் நடக்கும், பிரதமர் மோடியின் கட்சிக்கு தலைவராக இருக்க அண்ணாமலை கால் தூசி கூட பெருமானம் இல்லாதவர் -கோபிசெட்டிபாளையத்தில் உறவினரின் 60 ஆம் ஆண்டு திருமணவிழாவில் கலந்து கொண்ட நடிகர் எஸ்வி.சேகர் பேட்டி.

கோபிசெட்டிபாளையம் அமலாபள்ளி அருகே உள்ள புவனபவனம்  திருமண மண்டபத்தில் திரைப்பட நடிகர் எஸ் வி சேகர் அவரது உறவினரின் டாக்டர் புவனேஸ்வரன் 60 ஆம் ஆண்டு திருமண விழாவில் கலந்து கொண்டார்

பின்னர் திரைப்படநடிகர் எஸ் வி சேகர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது,

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா என்பது குறித்து இனிமேல் தான் தெரியவரும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும், அவ்வாறு இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் கொண்டு வந்தாலும் 2026 இல் கூட இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமல்ல கடந்த 70 ஆண்டு காலமாக பிராமணர் சமுதாய உட்பட பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அரசினுடைய எந்த சலுகைகளையும் அனுபவிக்க முடியாமல் இருந்து கொண்டிருப்பவர்கள்,

தலைகளுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு கொடுங்கள் என்ற பெரியார் வார்த்தைக்கு ஏற்ப இன்று வரை நடைபெறவில்லை

தமிழக சட்டசபையில் பிராமணர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை, இது சமூகஅநீதி இல்லையா ???

ஓபிஎஸ் ரஜினிகாந்த் சந்திப்பு- ஜெய்லர் படம் பார்த்துவிட்டு ஓபிஎஸ் ரஜினிக்கு வாழ்த்து சொல்ல சென்றிருப்பார்

ஓபிஎஸ் தனி கட்சி துவங்குவதற்கு வாய்ப்பு உள்ளது, ஒருங்கிணைந்த அதிமுக என்பது ஒரு மிகப்பெரிய பலம், இரட்டை இலை சின்னத்திற்கு தான் முதல் மரியாதை, யார் கட்சியில் செல்வாக்காக உள்ளனரோ அவர்கள் பின்னால் கட்சித் தொண்டர்கள் செல்லும் நிலை ஏற்படும்.

ஓபிஎஸ் - ரஜினி சந்திப்பு குறித்து அவர்கள் சொன்னால் தான் தெரியும்,

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்காது அதிமுக தலைமையில் தான் நடக்கும்,

டெல்லியில் பாஜக தான் பெரிய கட்சி, தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி, இது பாஜக மூத்த தலைவர்களுக்கும் தெரியும், பாஜக தலைவர் பதவியை நான் கேட்கவே இல்லை எனக்கு அது வேண்டவும் வேண்டாம்,  மாதம் 10 அனாதை பிணங்களை அடக்கம் செய்கிறேன் இதைவிட தலைவர் பதவி பெரிதா, அண்ணாமலையே தலைவர் பதவியில் இருக்க மாட்டார், காரில் சென்று விட்டு நடை பயணம் என்று சொல்வது ஒரு நடை பயணமா?எதற்கு ஊரை ஏமாற்றும் வேலை அதற்கு அவசியமே இல்லை, லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் பெரிய தவறு என்பது தற்போது இல்லை, ஊழல் என்பது ஊ லாலா மாதிரி ஆகிவிட்டது.

லஞ்சம் வாங்கிக்கொண்டு வேலையை செய்து கொடுப்பவர்கள் நல்லவர் என்ற மனோபாவம் வந்துவிட்டது , இதுவரை 90 படம் நடித்துள்ளேன் 195 படங்கள் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன் இதுவரை ஒரு பைசா பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்த்ததில்லை. அண்ணாமலையின்  வாழ்க்கையே  ஊழலாக உள்ளது, அண்ணாமலைக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியாதா?

இவருக்கு எதற்கு ஐந்து லட்சம் ரூபாய் வாட்ச், ஒரு சின்ன ரசீதை கூட காட்ட முடியாத ஒருவர்  பாஜக கட்சியின் தலைவர், பிரதமர் மோடியின் கட்சிக்கு தமிழக தலைவராக இருக்க அண்ணாமலை கால் தூசி கூட பெருமானம் இல்லாதவர்.

விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது, எம்ஜிஆர் தனது ரசிகர்களை எவ்வாறு கட்டமைத்து வைத்திருந்தாரோ, அதே போன்ற அளவிற்கு நடிகர் விஜய் தனது ரசிகர்களை கட்டமைத்து வைத்துள்ளார், ஆனால் அவர் என்ன சொல்லப் போகிறார் என்று  தெரியவில்லை

நான் பிஜேபியை விட்டு வெளியே வந்தால் அரசியலை விட்டு வெளியே வந்து விடுவேன், என்னுடைய ஓட்டு தான் அரசியல் கட்சிகளுக்கு தேவை, எந்த அரசியல் கட்சி ஓட்டும் எனக்கு தேவையில்லை,

அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக கட்சி தனித்து இயங்குவது வேஸ்ட், பாஜகவில் திறமையானவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர், அவர்களை விட அண்ணாமலை எந்த விதத்திலும் உயர்ந்தவர் இல்லை,

அண்ணாமலை நின்ற தொகுதியிலே அவரால் வெற்றி பெற முடியவில்லை,

தமிழகத்தல் அண்ணாமலை தலைவராக உள்ள வரைக்கும் பாஜக வெற்றி பெறுவதற்கு உண்டான வாய்ப்பு பூஜ்யம்

திமுக அரசு கொண்டு வந்த காலை உணவு திட்டம் நல்ல விஷயம், ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுகின்ற குடும்பங்கள் எவ்வளவோ இருக்கின்றன, ஒரு ஏழையின் பசியும் வலியும் தெரியாதவன் பொது இடத்தில் இருப்பதற்கு,பேசுவதற்கு யோகிதையற்றவகள்,

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 300 இடங்களை பெற்று பிரதமர் மோடி 3 வது முறையாக  ஆட்சி அமைப்பார்,

அண்ணாமலை அரசியல் குழந்தை, அவருக்கு ஒன்றும் தெரியாது, அண்ணாமலை கட்சியில் சேர்த்தவர்களில் பாதி பேர் கிரிமினல் மாதிரிதான் சேர்த்துள்ளார்,

அண்ணாமலையும் சீமானும் தேர்தலில் நின்றால் அண்ணாமலை விட சீமான் அதிகமான வாக்குகள் வாங்குவார்,

சீமான் மூன்று மாதங்களுக்கு மேல் ஒரே கருத்துக்களை தெரிவிக்க மாட்டார், சீமான் உணர்ச்சிவசப்படக் கூடியவர், அரசியலில் சீமானுக்கு குறிக்கோள் இல்லாத பயணம் உள்ளது

Previous Post Next Post