ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத் தில் சத்திநகரம் மற்றும் சத்தி கிராம புற பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி யை முன்னிட்டு,பிரதிஷ்டை செய்ய ப்பட்ட விதாயகர் சிலைகள், சத்திய மங்கலம் எஸ்.ஆர்.டி. கார்னர் பகுதி க்கு, அலங்கரிக்கப்பட்ட 70 க்கும் மேற்பட்ட வாகனங்களில் எடுத்து வரப்பட்டன. பின்னர் நடைபெற்ற விசர்ஜன ஊர்வலம், இந்து முன் னனி மாவட்டத் தலைவர் குருசாமி தலைமையில் நடைபெற்றது. ஊர்வத்தை மருத்துவர் நாகராஜ் குத்து விளக்கு ஏற்றியும்,
சத்தி நகர அதிமுக செயலாளரும், முன்னாள் நகர்மன்றத் தலைவரு மான ஓ.எம்.சும்பிரமணியம் கொடி யசைத்தும் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். ஊர்வலம் மைசூர் டிரங்க் ரோடு, எஸ்.பி.எஸ் கார்னர், போலீஸ் ஸ்டேசன் வழியாக, தபால் ஆபிஸ் ரோடு, கோட்டு வீராம்பாளை யம் சாலை வழியாக, பழைய மார்க் கெட், கடைவீதி வழியாக, பெரிய பள்ளிவாசல் வீதி, சத்யா தியேட்டர் ரோடு, வரதம்பாளையம், திப்பு சுல் தான் ரோடு, வடக்கு பேட்டை, அத் தாணி ரோடு வழியாக சென்று, ஆற்று பாலம் சித்திவிநாயகர் கோவில் படித்துறையை அடைந்து, பவானி ஆற்றில் விநாயகர் சிலை களை கரைத்தனர்.நடுநிசியை தாண்டியும் நடைபெற்ற ஊர்வலத் தை, சாலையின் இருபுறமும் நின்ற பக்தர்கள், பொதுமக்கள், வண்ண மயமான, பல்வேறு வகையிலான விநாயகரை வழிபட்டனர். சத்திய மங்கலம் உதவி காவல் கண் காணி ப்பாளர் அய்மென் ஜமால் இ.கா.ப தலைமையிலான 500க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர். உதவி ஆட்சியர் வினயக்குமார் மீனா இ.ஆ.ப தலை மையில் வருவாய்துறையினர் ஊர்வல சட்டம்- ஒழங்கு அமைதி பணியினை கண்காணித்தனர். ஈரோடு மாவட்ட காவல் கண் காணி ப்பாளர் திவாகர் இ.கா.ப இரவு 12 மணிவரை ஊர்வல நடவடிக்கை களை நேரில் கண்காணித்து, காவல்துறையினருக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.