சமூக வலைதளம் மூலம் 2 ஆண்டு காதல். கடந்த சில நாட்களாக பேசாததால் காதலியை கழுத்தை அறுத்துக் கொன்று காதலனும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது !!
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரது மகள் சத்யஸ்ரீ இவர் திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரிசப்ஷினிஸ்டாக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்த சத்தியஸ்ரீ பணியில் சேர்ந்துள்ளார்.அப்பொழுது அங்கு வந்த நரேந்திரன் என்ற வாலிபர் அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது திடீரென இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நரேந்திரன் தன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சத்யஸ்ரீ கழுத்தை அறுத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் இதில் படுகாயம் அடைந்த சத்திய ஸ்ரீ சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விழுந்தார் அப்பகுதியினர் சத்திய ஸ்ரீயை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனாலும் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
நரேந்திரன் படுகாயங்களுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் நரேந்திரனிடம் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் சத்யஸ்ரீ சமூக வலைதளம் மூலம் பழக்கமான கடலூரை சேர்ந்த நரேந்திரன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் போன் மூலமாகவே காதலித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சத்யஸ்ரீ நரேந்திரன் உடன் பேசாமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நரேந்திரன் கடலூரில் இருந்து பேருந்து மூலமாக திருப்பூர் வந்துள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்த போது சத்யஸ்ரீ தெரிவித்த மருத்துவமனை முகவரியை கொண்டு நேரடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கே பணியில் இருந்த சத்யஸ்ரீயை கண்டதும் ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் பல முறை குத்தி அறுத்து விட்டு தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சமூக வலைதளம் மூலம் காதலித்து சில நாட்கள் பேச மறுத்த காதலியை கழுத்தறுத்து கொலை செய்த காதலன் தானும் கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் திருப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.