தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் அறிக்கை

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் பத்திரிகை அறிக்கை
நம்பிக்கையில்லா தீர்மானம் !!! நம்பிக்கையை இழந்த எதிர்கட்சிகள் !!!
ஒரு வழியாக எதிர்கட்சிகள் ஆவலோடு எதிர்பார்த்த நம்பிக்கை இல்லா தீர்மானம் முடிந்தது!!
ஆனால் எதிர்கட்சிகளின் நடவடிக்கையை பற்றி பொதுத் தளத்தில் வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது !!
மணிப்பூர் விவகாரம் பற்றிய எதிர்கட்சிகளின் நொடிக்கு ஒரு முறை மாறிய நிலைப்பாடுகள், அவர்களின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது !
பாராளுமன்ற கூட்டத்தொடர் துவங்கும் முன்னே பிரதமர் மணிப்பூர் பற்றி பேசிய நிலையில், பாராளுமன்றத்தில் அதை பேச வேண்டும் என்றார்கள் !
மத்திய உள்துறை அமைச்சரும் , ராணுவ அமைச்சரும் மணிப்பூர் பற்றி நிச்சயம் பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்று கூறிய போது , பிரதமர் தான் பேச வேண்டும் என்று சொன்னார்கள்.
பிரதமர் பேசினால் வெளிநடப்பு செய்கிறார்கள் !
இவர்கள் நினைத்தது போல தான் பாராளுமன்றமும் தேசமும் இயங்க வேண்டும் என்று நினைக்கிறார்களா?
இவர்கள் சொல்லும் நேரத்தில் தான் பிரதமர் பேச வேண்டும் என்று நினைக்கிறார்களா ?
இவர்கள் குறித்துக் கொடுக்கும் அடிப்படையில் தான் பாராளுமன்ற அலுவல்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா என்று புரியவில்லை !!
ஒரு வேளை, இவர்கள் இன்னும் 2014 க்கு முன்பு இருந்த அதிகார தோரணையில் இருந்து வெளியே வரவில்லையா என்ற ஐயம் எழுகிறது? ஒரு குடும்பம் , ஒரு கிட்சென் கேபினெட் , ஒரு வீட்டில் எடுக்கும் முடிவுகள் எல்லாம் அனைவரையும் கட்டுப்படுத்திய காலம் 2014 ஆம் ஆண்டோடு மலையேறி விட்டது !
இப்போது நடப்பது மக்களின் ஆட்சி ! மக்களிடம் அதிகாரத்தை காட்டாமல், மக்கள் அளித்த அதிகாரம் மூலம் தேசப்பணியில் ஈடுபடும் ஆட்சி !! மக்கள் மீது சட்டத்தை திணிக்காமல், மக்கள் நலனுக்காக மட்டுமே சட்டமியற்றும் ஆட்சி இது !!
இது அதிகார ஆட்சி இல்லை !! அரவணைக்கும் ஆட்சி !!
மக்களின் நம்பிக்கையை பெற்று , ஏகோபித்த ஆதரவோடு ஜனநாயக ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கும் இந்த காலத்தில், மீண்டும் தங்களது அதிகார தோரணையை காட்ட துவங்கி இருக்கின்றன எதிர்கட்சிகள்.
ஆட்சியில் இல்லாத போதே இவர்களின் நடவடிக்கை இப்படி இருப்பதை மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் !
பாரத பிரதமர் மோடி கூறியது போல, 2028 ல்லாவது கொஞ்சம் முன்னேற்றம் அடைவார்கள் என்று நம்புவோம் ! என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்
Previous Post Next Post