திருப்பூர் வியாபாரிகளுக்கு செம்ம ஜாக்பாட்... ஆதார் அட்டை இருந்தா வட்டில் இல்லாமல் கடன் கொடுக்குது திருப்பூர் மாநகராட்சி!

 திருப்பூர் மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் கடன் பெறஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்த செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:


திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறும் நாள் 10.8.2023 (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாரிபாரிகளுக்கு பாரத பிரதமர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் (PMSVANIDHI) மூலம் முதல் கடன் ரூ.10,000/- பெறலாம்.  அதனை குறைந்தபட்சம் 10 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் பொழுது, இரண்டாவது கடன் ரூ.20,000/- பெறலாம். அதனை குறைந்தபட்சம் 12 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் பொழுது, மூன்றாவது கடன் ரூ.50,000/- பெறலாம், அதனை வங்கிகளின் மூலம் வழங்கப்படும் காலத்திற்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

கடன் பெற விருப்பம் உள்ள சாலையோர வியாபாரிகள் கொண்டு வர வேண்டிய

ஆவணங்கள்:


1.ஆதார் அட்டை நகல்

2.வாக்காளர் அடையாள அட்டை நகல் 3.வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்

4.ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி

மேற்கண்ட ஆவணங்களுடன் அவினாசி ரோடு, R.K.ரெஸிடென்சி எதிர்புறம் மற்றும் வாலிபாளையம், மாநகராட்சி பள்ளி வளாகம், ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நகர்புற வாழ்வாதார மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், தகவலுக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 9944054060 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, திருப்பூர் மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் இந்த நல் வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர்  பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

இந்த கடனுக்கான வட்டி மானியமாக கிடைக்கும் என மாநகராட்சி தரப்பில் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post