சேலம் நீதிமன்ற வளாகத்தில் சிறை கைதி ஆர்பாட்டம்


கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபு என்ற மாங்காய் பிரபு வயது 40. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு கரூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு வீராணத்தில் நடந்த கொலை வழக்கில் விசாரணை கைதியாகவும் சிறையில் உள்ளார். இது தவிர மேலும் ஒரு கொலை வழக்கும் அவர் மீது உள்ளது.இந்த நிலையில் இன்று வீராணம் கொலை வழக்கு தொடர்பாக சேலம் கோர்ட்டுக்கு போலீசார் அவரை அழைத்து வந்தனர் .அப்போது நீதிமன்றம் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர்கள் கூறியதாவது, சேலம் மத்திய சிறையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாட்டிலில் பழங்களை ஊற வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் நேற்று என்னை நிர்வாணமாக்கி தாக்கினர். மேலும் அந்த ஊறலை நான் வைத்ததாக ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினர்.நான் அதற்கு மறுத்ததால் சிறை சூப்பிரண்டு உட்பட அதிகாரிகள் என்னை கண்மூடித்தனமாக தாக்கினர். இதனால் எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், சிறையில் நடக்கும் அனைத்து குற்றச்சம்பவங்களுக்கும் அதிகாரிகள் தான் உடந்தையாக உள்ளனர் .கண்ணீர் விட்டு கதறினார் . மேலும் சிறையில் உலகத்தில் புதைக்கப்பட்டுள்ள செல்போனை எடுத்தால் பெரிய உண்மைகள் வெளிவரும் என்றும் ஆனால் அதை எடுக்க மாட்டார்கள் அதை எடுத்தால் அதிகாரிகள் மாட்டிக் கொள்வார்கள் என்றும் தெரிவித்ததால் மேலும் பரபரப்பு நிலவியது இது போன்ற தங்கள் குற்றச்சாட்டுகளை சொல்வதால் நாளை சிலைக்குச் சென்ற பிறகு தங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ன வேண்டுமானால் நடக்கலாம் எது நடந்தாலும் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் 

Previous Post Next Post