அரசு நிலம் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதை தடுக்க வேண்டும்...முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமையில் அதிமுகவினர் மனு

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3840 சதுர அடி பரப்பளவு உள்ள அரசு இடத்தை ஆக்கிரமிக்க திமுகவினர் முயற்சித்து வருவதாக முன்னாள் முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமையில்  அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது: 
திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்திற்குட்பட்ட நொய்யல் வீதி பகுதியில் 3840 சதுர அடி பரப்புள்ள இடம் அரசுக்கு சொந்தமான இடமாக இருந்து வருகிறது.  கடந்த அதிமுக ஆட்சியின்போது திருப்பூர் பெரிய கடைவீதியில் செயல்பட்டு வரும் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இட பற்றாக்குறை காரணமாக அந்த இடத்தை பள்ளி பயன்பாட்டிற்காக பயன்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது திமுக ஆட்சி அமைந்த உடன் 3840 சதுர அடி அளவுள்ள அந்த இடத்தை திமுகவினர் 24 பேரின்  பெயரில் பட்டா வழங்குவதற்கு திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் பரிந்துரை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில்  உள்ளது,  பள்ளி பயன்பாட்டிற்காக கடந்த அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இந்த இடத்தை அபகரிப்பதற்காக நீதிமன்றத்தில் அரசு தரப்பில் இந்த இடத்தை அபகரிப்பதற்காக அரசு தரப்பில் அரசு அதிகாரிகளையோ வருவாய் துறை அதிகாரிகளையோ தரப்பினர்களாக சேர்க்காமல் தனிப்பட்ட நபர்கள் தங்களுக்கு இடையே பாகப்பிரிவினை வழக்காக தொடர்ந்து மோசடி செய்துள்ளனர் . இந்த வழக்கு விசாரணை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து தீர்வு காண கூறி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையிலும் அதனை மறைத்து தற்போது 24 நபர்களுக்கு பட்டா வழங்க சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்திருப்பதன் மூலம் அந்த இடத்தை திமுக அபகரிக்க முயற்சி மேற்கொண்டு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை எனில் அதிமுக சார்பில் அப்பகுதி மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிகழ்வில் கவுன்சிலர்கள் கண்ணப்பன் , அன்பகம் திருப்பதி, கட்சி நிர்வாகிகள் 
சி.எஸ்.கண்ணபிரான், தம்பி மைதீன், வக்கீல் முருகேசன்,தங்கவேல், சையது அலி, கேபிள் ரஃபிதீன், தஸ்தஹீர், ஆண்டவர் G.பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

Previous Post Next Post