ஆமை வேகத்தில் நடைபெறும் சாலைபணி நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா உட்பட்டி பூதான குன்னு பெருங்கரை நெல்லியாளம் சரகம் .1 கொலப்பள்ளி இணைப்பு சாலை கடந்த சில மாதங்களாக 100 மீட்டர் இன்டர்லாக் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது இதனால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் இந்த பகுதியில் ஏராளமான மூத்த குடிமக்கள் வயதானவர் உடல்நிலை பாதிக்கப்பட்டோர் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாண மாணவிகள் தோட்டத் தொழிலாளர்கள் இவ்வழியாக நூற்றுக்கணக்கான பேர் தினமும் நடந்து செல்லும் இந்த சாலை வழி மிக முக்கியமான பிரதான சாலையாகும் 100 மீட்டர் சாலை பணியானது கடந்த சில மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மருத்துவமனைக்கு மூத்த குடிமக்களை கொண்டு செல்ல முடியாமல் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர் இச்சாலையை விரைந்து முடிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்