சூலூர் தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் ஒன்றிய செயற்குழு பெருமாள் கோவில் திடலில் மாவட்ட இணைய செயலாளர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார் மேலும் ஒன்றிய செயலாளர் மோகன் கொங்கு மண்டல தலைவர் உதயகுமார்கண்ணன் மற்றும் காளிமுத்துநாகராஜ் மாவட்டத் துணைத் தலைவர் ஆனந்த் ஒன்றிய இணை செயலாளர் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 1)சூலூர் சுற்றுவட்டார பகுதியில் 50 இடத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஸ்டை செய்து மூன்று நாட்கள் விளையாட்டு போட்டி ஆன்மீக சொற்பொழிவு அன்னதானம் ஊர்வலம் நடத்தி மூன்றாவது நாள் நிறைவாக சூலூர் அண்ணா கலையரங்கில் விசர்ஜன பொதுக்கூட்டம் நடத்தி அனைத்து சிலைகளும் சூலூர் பெரியகுளத்தில் கரைப்பது என்று முடிவு செய்யப்பட்டது 2)நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் நிலை நிறுத்தியத்துக்கு பாராட்டுவதோடு அந்த இடத்திற்கு பாரத பாரம்பரியத்தை காக்க சிவசக்தி என்று பெயரிட்ட பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு மனதார பாராட்டுக்கள் 3)வரும் ஒன்பதாம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா கோவை மாவட்டம் முழுக்க சிறப்பாக கொண்டாடுவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பிற்கு ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது