சேலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய விபத்தில் பலியான கனகராஜ் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் ஆனால் கோடநாடு வழக்கை விசாரித்த ஊட்டி நீதிமன்றம் கனகராஜ் ஜெயலலிதாவின் கார் டிரைவர் எனவும் அதன் பிறகு அவரை ஜெயலலிதா பணியில் இருந்து நீக்கி உள்ளார் என்றும் அதன் பிறகு அவர் அதிமுகவை சேர்ந்த 12 தலைவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. ஜெயலலிதாவின் கார் டிரைவராக கனகராஜ் இல்லை என்று நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியவில்லையா இப்போதைய ஏன் கூறுகிறார் சிபிசிஐடி போலீசார் விசாரித்தால் கனகராஜின் அண்ணன் தனபால் பல தகவல்களை கூறுவேன் என்று தெரிவித்துள்ளார் பிறகு ஏன் எடப்பாடி பழனிச்சாமி இடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை திமுக ஆட்சிக்கு வந்தால் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தார் ஆனால் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி இடம் விசாரணை நடத்த வேண்டும் முடிந்தால் இந்த வழக்கை சிபிஐயிட்டு மாற்ற வேண்டும் காஞ்சிபுரத்தில் அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தொடக்க உள்ளோம் அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் பேசுகிறார் என்று கூறினார்.
சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்