நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான் -3 விண்கலனில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் இன்று மாலை நிலவில் வெற்றிகரமாக தரையறைந்து உள்ளது இந்த வரலாற்று நிகழ்வை அனைவரும் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளனர்
தற்போது சந்திரயான் - 3 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட லேண்டா் கலன், நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்குள் பயணித்து வருகிறது.
மேலும், சந்திரயான் - 2 திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் சாதனம் சந்திரயான் -3 லேண்டருடன் தொடர்பு கொண்டுள்ளது.
இதனால், ஆர்பிட்டர் இதுவரை எடுத்த புகைப்படங்கள் மற்றும் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு லேண்டர் கலனை நிலவில் பத்திரமாக தரையிறக்குவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ தீவிரமடைந்துள்ளது.
ரஷியா அனுப்பிய லூனா -25 விண்கலம் தோல்வியில் முடிந்த நிலையில், சந்திரயான் -3 லேண்டர் தரையிறக்கம்
வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக மாறியுள்ள சந்திரயான் -3 லேண்டர் கலன் நிலவில் தரையிறக்கம்
மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறங்கியுள்ளது. இந்த வரலாற்று நிகழ்வு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்திருந்த நிலையில்
இஸ்ரோவின் லேண்டெர் நிலவில் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது இந்த மகத்தான சாதனை புரிந்த இந்திய விஞ்ஞானிகளுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த இந்திய அரசுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது நெல்லியாளம் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் நீலகிரி மாவட்டம்