தென்னை நார் தொழிற்சாலைகள் கடன் தவணை செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்... முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கோரிக்கை

தேங்காய் விலை வீழ்ச்சி, கொப்பரையை ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்வது மற்றும் நலிவடைந்து வரும் தென்னைநார் தொழில் குறித்து புதுடெல்லியில்  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல்  தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் முன்னாள் மக்களவை துணை சபாநாயகரும், மாநிலங்களவை உறுப்பினருமான  மு.தம்பிதுரை, மாநிலங்களவை  உறுப்பினர்  சந்திரசேகர்  முன்னாள் அமைச்சர், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர், முனைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன்,    ஆகியோர் பங்கேற்று மேற்கண்ட தென்னை விவசாயிகளின்  பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

மேலும்,தென்னை நார் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தியாளர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு  முன்னாள் மக்களவை துணை சபாநாயகரும், மாநிலங்களவை உறுப்பினருமான  மு.தம்பிதுரை, மாநிலங்களவை  உறுப்பினர் .சந்திரசேகர்  முன்னாள் அமைச்சர், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர், முனைவர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன்  ஆகியோர் மாண்புமிகு மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் சந்தித்து கடந்த மேலும்,கொரோனா பெருந்தொற்று சமயத்தில் அறிவிக்கப்பட்ட லாக் டவுன் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக  உலக அளவில் பணமதிப்பு நிலையின்மை மற்றும் பொருளாதார நிலையின்மை காரணமாகவும்,மூலப் பொருட்களின் விலை அதிகமாகவும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விலை குறைவாகவும் உள்ள காரணத்தினால் இந்த தொழிலை நம்பி வந்துள்ள படித்த பட்டதாரி இளைஞர்கள் காயர் கம்பெனிகளை மூடும் நிலைக்கும், பல கம்பெனிகள் ஏலம் விடும் நிலைக்கும் வந்துள்ளன. இதனால்,வங்கிகளுக்கு தங்கள் கடன் தவணைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.   மேலும் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு வங்கிகளின் என்.பி.ஏ., -வகை கடன் தவனை  செலுத்த வேண்டிய நாட்களை 90 நாட்களில் இருந்து 180 நாட்களாக உயர்த்தி கொடுக்க வேண்டும் எனவும்,அனுபவம் வாய்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியை கொண்ட குழுவை அமைத்து தென்னை நார் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் ஏற்றுமதி தொழிலை மறுசீரமைப்பு செய்து மேம்படுத்தி அன்னிய செலாவணியை  அதிகரிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு தென்னை விவசாயிகள்கூட்டமைப்பு கூட்டமைப்பின் தலைவர் ஆர்.ஏ.சக்திவேல், செயலாளர் .செல்லத்துரை, நிர்வாகிகள் காந்தி, நாகராஜன், தாஜுதின்,முகமது நூருல்லா,சண்முகசுந்தரம்,பத்மநாபன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Previous Post Next Post