அர்த்தமாயிந்தா ராஜா... வெல்லுமா ரஜினி, நெல்சன் கூட்டணி... ஜெயிலர் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினி படம் என்றாலே வரவேற்புக்கு பஞ்சம் இருக்காது. எவ்வளவு வரவேற்பு இருக்குமோ, அதே அளவுக்கு 2k கிட்ஸ்கள் ட்ரோல் பண்ணி பங்கம் பண்ணுவதும் ஆங்காங்கே இருக்கும்.  

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் ஜெயிலர் எப்படி இருக்கிறது? 

மகனை கொன்றவர்களை முத்துவேல் பாண்டியனாக வரும் ரஜினி பலி வாங்கினாரா? இல்லையா?? என்பதும் அதைத்தொடர்ந்து நடக்கும் ட்விஸ்ட்களும் தான் கதை. சமீப காலங்களில் வயதாகி விட்டதால் ரஜினியின் பெர்பார்மன்ஸ் குறைந்து விட்டது என சொல்பவர்களை, தனது ஸ்டைல் நடிப்பில் வாயை பிளக்க வைத்து இருக்கிறார் டைகர் முத்துவேல் பாண்டியன். 

முதலில் ரஜினியின் மேக் அப், அவருக்கு  ஹேர் ஸ்டைல் எல்லாம் அவரது வயசையும் தாண்டி சுண்டி இழுக்கும் அளவுக்கு சிறப்பாக பண்ணி இருக்கிறார்கள். நடிப்பிலும் மனுஷர் பின்னி எடுக்கிறார். 

யூத் கேரக்டரில் வராமல் ரிட்டையர்ட் ஆன கேரக்டரில் வருவதால் ரஜினியின் நடிப்பு கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி போய் விடுகிறது. 

முதல் பாதியில் மகனை கொன்றவர்களை பலி வாங்கும் படலத்தை தொடங்கி பரபரப்பை உருவாக்கி இரண்டாம் பாதிக்கு தயாராக்கி வைத்து இருக்கிறார்.

இடைவேளை முடிந்ததும் ஜெயிலராக வரும் ரஜினி காக்கிச்சட்டை ரஜினியை நியாபகப் படுத்துகிறார். இளவயது ஜெயிலராக மிரட்டுகிறார். தலைவா உனக்கு வயசு ஆகல என்ற சப்தம் காதை பிளக்கிறது. 

ரஜினி பட பார்முலாவை அப்படியே கையில் எடுத்து கொஞ்சம் தனது ஸ்டைலில் ஹேண்டில் பண்ணி இருக்கிறார் நெல்சன்.

முதல் பாதியில் லோ பட்ஜெட் படம் போல இருந்தாலும் இரண்டாம் பாதியில் படத்துக்காக நிறைய செலவு செய்து இருக்கிறார்கள்.

ராஜ மாதாவாக டெரர் காட்டிய ரம்யா கிருஷ்ணன் இல்லத்தரசியாக அமைதியாக வந்து போகிறார். 

நு காவாலியா பாட்டில் அழகு தேவதையாக வந்து ஆட்டம் போட்டு லைக் அள்ளுகிறார் தமன்னா. கொழுக் மொழுக் பஞ்சாபி பார்பி பொம்மையாக பவுசு காட்டும் தமன்னாவுக்கு ரஜினி பேன்சின் எக்ஸ்ட்ரா லைக்ஸ் நிச்சயம்.

ரஜினி ஒரு பக்கம் மோகன்லால் ஒரு பிக்கம் என்று ஆளாளுக்கு நடிப்பில் மிரட்டுகிறார்கள். லால் ஏட்டனுக்கு நடிப்பை பத்தி சொல்லித்தர வேண்டுமா என்ன? கலர் கலர் சட்டைகளில் வந்து கலக்குகிறார்.

களவாணி கண்ணையா சாங் விறுவிறுப்பு கூட்டுகிறது.

ரியலிஸ்டிக் ரஜினி படத்தை காலத்துக்கேற்ப தந்திருக்கிறார் நெல்சன். பீஸ்ட் படத்தில் இருந்து நல்ல பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார் போல... ஜெயிலர் படத்தை சீனுக்கு சீன் செதுக்கி இருக்கிறார்.

படத்தின் கதை பழைய படிக்காதவன் படத்தை நியாபகப் படுத்தினால் கம்பெனி பொறுப்பல்ல..

அனிருத் மியூசிக் அப்படி எல்லாம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. பரவாயில்லை ரகம் தான்.
இரண்டாம் பாதியில் அவ்வப்போது இழுவையாய் தெரிகிறது. வில்லனை கொடூரமான வில்லனாக காட்ட நெல்சன் காட்டும் வித்தைகள் போர் ரகம்.
ரஜினி வெற்றி கொள்ளும் காட்சிகளை ரஜினி ரசிகர்களுக்கு படையலாக்க மெனக்கெட்டு வேலை செய்து இருக்கிறார் நெல்சன்.

அன்னாத்தே, ஜெயிலர் என்று வயதுக்கேற்ற கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்து இருப்பதே ரஜினிக்கு வெற்றி தான்.




Previous Post Next Post