தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக் கிணங்க,ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, நீர்வளத் துறை தலைமை பொறியாாளர் சிவலிங்கம் கோவை முன்னிிலை யில்,ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, 15.08.2023 கீழ் பவானி திட்ட பிரதான கால்வாயில், நன்செய் பாசனத்திற்காக நீரை திற ந்து விட்டார்.கீழ்பவானித் திட்ட பிர தான கால்வாயில், திறக்கப்படும் தண்ணீர் மூலம், ஈரோடு மாவட்டத் தில், சத்தியமங்கலம், நம்பியூர். கோபி செட்டிபாளையம், பவானி, ஈரோடு. பெருந்துறை, மொடக்குறி ச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களில் 1.82,566,75ஏக்கர்பாசன நிலங்களும் திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டத்தில் உள்ள, 20.456.31 ஏக்கர் மற்றும் கரூர் மாவட்டத்தில் புகளூர் வட்டத்தில் உள்ள 3,976.94 ஏக்கர் மொத்தம் 2,07,000 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
இதில், முதல் போகத்திற்கு 1,03,500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறு ம். கீழ்பவானித் திட்ட பிரதான கால் வாயில் திறக்கப்படும் தண்ணீர் திற ப்பு ஆகஸ்ட்15முதல்டிசம்பர் 13 வரை 120 நாட்களுக்கு நன்செய் பாசனத் திற்காக, தண்ணீர்விடப்படுகிறது. .எனவே விவசாயிகள் தண்ணீரை, சிக்கனமாக, பயன்படுத்த வேண்டு மென,நீர் வளத்துறை மூலம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு பொறியாளர் (பவானி வடி நிலவட்டம்) மன்மதன் செயற்பொறியாளர்கள் திருமூர்த்தி (கீழ்பவானி வடிநிலககோட்டம்), அருள் அழகன் (பவானிசாகர் வடி நிலக்கோட்டம்), வேளாண்மைதுறை இணை இயக்குனர் முருகேசன் (பொ), உதவி செயற் பொறியாளர் கள்,ஆனந்தராஜ், உமாபதி,பொங்கி யண்ணன், உதவி பொறியாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர் கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.