கே.வி.குப்பம் அருகே சிறுவன் குடித்த மேங்கோ ஜீஸ் பேக்கட்டிலிருந்த எலியால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பி.கே.புரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் - நதியா. காட்பாடி - குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் வைத்து தொழில் நடத்தி வருகின்றனர். இத்தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகளும், 04 வயதில் சரவணன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று இவரது குழந்தைகள் ஹோட்டல் எதிரே உள்ள பெட்டி கடையில் ஜீஸ் வாங்க சென்றுள்ளனர். அப்போது மாஷா என்ற மாம்பழம் திரவம் கொண்ட ருபாய் 10 மதிப்பீலான ஜீஸ் ஒன்றை வாங்கியுள்ளனர். வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்ற குடிக்கலாம் என்று வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது சிறுவன் சரவணன் ஜீஸ் பேக்கட்டை எடுத்து அதிலுள்ள பழுப்பினை வைத்து, ஜீஸ் பேக்கட்டிலுள்ள ஒட்டையில் வைத்து ஜீஸினை உறிய தொடங்கியுள்ளார். ஆனால் ஜீஸ் வழக்கம்போல் இல்லாமல் கசப்பு தன்மையுடன் இருந்துள்ளது. ஏதோ உள்ளே இருப்பது போன்று தோன்றியுள்ளது. இதனை கண்ட அவரது பெற்றோர்கள் ஜீஸ் பேக்கட்டினை வாங்கி கிழித்து பார்த்துள்ளனர். அதில் குட்டி எலி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதனை செல்போனில் வீடியோ எடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக போன் மூலம் தொடர்பு கொண்டால் அதிகாரி அழைப்பினை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர். கே.வி.குப்பம் அருகே ஜீஸ் பேக்கட்டில் எலி இருந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையீட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.