பவானிசாகர் அணை, மேல் பகுதியை பார்வையிட, 4வது ஆண்டாக, இந்த ஆண்டும் அனுமதி மறுப்பு-பொதுமக்கள் ஏமாற்றம்.



ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 ல் (ஆடிப் பெருக்கு நாளில்), பவானி சாகர் அணை மேல் பகுதியை, பொது மக்கள் பார்வையிட அனுமதி ப்பது வழக்கம்.ஆடி 18ம் நாளில், ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, கோவை ,திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பவானி சாகர் அணையை கண்டுகளிப்பது வழக்கம். கொரோனா நோய் தொற்று பரவலால், கடந்த மூன்று ஆண்டுகளாக.ஆடிப் பெருக்கு நாளில்,அணை மேல்பகுதியை, பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டும் தடை விதித்துள்ளதால், பொது மக்க ளால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, அதிகாரிகள் கூறும் போது, அணையில் நீர்மட்டம் 83 அடி இருப்பதால், பாதுகாப்புநடவடிக்கை கள் மற்றும் பொதுமக்களின் பாது காப்பு கருதி, அணையின் மேல் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல, தடை விதித்து உள்ளதாகதெரிவித்த னர். ஆனால், வழக்கம்போல, பவா னி சாகர் அணை பூங்காவிற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.


Previous Post Next Post