கணபதி பாளையத்திலிருந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை 22 கி. மீ. ஹெல்மெட் விழிப்புணர்வு சாதனை கட்டைக்கால் நடைப்பயணம் :

 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி கணபதிபாளையம்கட்டைக்கால்  ரமேஷ் ஒக்காளி என கூறப்படும் கட்டைக்கால் கலையின் மீது  மிகவும் ஆர்வம் கொண்ட நடனக் கலைஞர்.



 இவர் ஈரோடு தமிழன்னை கலைக்குழுவின்  சதாசிவத்துடன் இணைந்து கட்டைக்கால்  நடனம் செய்து வருகிறார்.



 இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது விபத்து ஏற்பட்டது அந்த சமயத்தில் அவர் அணிந்திருந்த தலைக்கு வசம் அவரை காப்பாற்றியது. அதிலிருந்து இருசக்கர  வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசத்தின் பயன் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 



இவர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படும் வகையில் கணபதி பாளையத்திலிருந்து  ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சுமார் 22 கிலோமீட்டர்  கட்டைக்கால் விழிப்புணர்வு  சாதனை நடை பயணம் மேற்கொண்டார்.



 இந்த சாதனை விழிப்புணர்வு கட்டைக்கால் நடை பயணத்தின் போது  வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வுபாதாகைகளுடன்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று  ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனுவாக அளித்தார்.

 தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக பூபாலன்  

Previous Post Next Post